நிறைவேறாத வேண்டுதல் நிறைவேற கூற வேண்டிய பாடல்!!

நாம் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு வேண்டுதலை முன் வைத்து தான் கடவுளை தரிசிப்போம். அந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி அடைவோம் இல்லை என்றால் ஒரு சில நேரங்களில் விரக்தி கோபம் ஏற்படும். அந்த நிலையில் தெய்வத்தை வழிபடுவதை ஒரு சிலர் நிறுத்தி விடுவார்கள்

By ·

நாம் ஒவ்வொருவரும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் போது ஏதாவது ஒரு வேண்டுதலை முன் வைத்து தான் கடவுளை தரிசிப்போம். அந்த வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மகிழ்ச்சி அடைவோம் இல்லை என்றால் ஒரு சில நேரங்களில் விரக்தி கோபம் ஏற்படும். அந்த நிலையில் தெய்வத்தை வழிபடுவதை ஒரு சிலர் நிறுத்தி விடுவார்கள் தெய்வமே இல்லை என்று ஒரு சிலர் கூறுவார்கள். ஆனால் இந்த ஒரு சூழ்நிலையில் வேண்டுதல் நிறைவேற பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தெய்வத்திடம் சரணாகதி

நாம் எந்த ஒரு தெய்வத்தை முழுமனதோடு பரிபூரணமாக வழிபாடு செய்து சரணாகதி அடைகிறோம் அந்த தெய்வத்தின் அருளை நம்மால் முழுமையாக பெற முடியும். அந்த தெய்வத்தால் நமக்கு பலவிதமான நன்மைகளும் நடக்கும் நாம் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறவில்லை என்றால் சோகமும் வருத்தமும் ஏற்படும். ஆனால் அந்த வேண்டுதல்கள் நிறைவேறாததற்கு வேறு ஏதாவது காரணங்கள் கூட இருக்கலாம். கர்ம வினைகள் கூட நம் வேண்டுதல்களை நிறைவேற விடாமல் செய்யும். பொதுவாகவே நம் கர்ம வினைகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும் என்ற விதி இருக்கும். அந்த விதியை மாற்றி நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்ற செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.

நம்மாழ்வார் பாடிய பாடல்

பெருமாளை நினைத்து நம்மாழ்வார் பாடிய பாடலை தான் நாம் தினமும் காலை மாலை என இருவேளையிலும் முழு மனதோடு பெருமாளை நினைத்து பாட போகிறோம். இதனை செய்தால் நிச்சயமாக சீக்கிரத்திலேயே வேண்டுதல்கள் நிறைவேறும். பெருமாளை கண் திறந்து பார்த்து இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வேண்டுதல்களை நிறைவேற்றுவார். இந்த ஒரு பாடல் திருவாய்மொழி தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பாடல். திருவண்வண்டூர் என்ற ஊரில் இருக்கக்கூடிய பெருமாளை நினைத்து இந்த பாடலை பாடியுள்ளார்கள் அங்கு இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று இந்த பாடலை பாடினால் நிச்சயமாக மிகவும் சிறப்பானதாக அமையும் ஆனால் அந்த கோவிலை நினைத்து நாம் வீட்டிலேயே பெருமாளை பார்த்து இந்த பாடலை பாடலாம். காலை மாலை என இருவேளைகளிலும் இந்த பாடலை பாடுவது மிகவும் சிறப்பானது

பாடல்

“திறங்கள் ஆகி எங்கும் செய்கள்ஊடு உழல் புள்ளினங்காள் சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் கறங்கு சக்கரக் கனிவாய்ப்பெருமாளைக் கண்டுஇறங்கி நீர் தொழுது பணியீர்அடியேன் இடரே”

இந்த பாடலை முழு மனதோடு பெருமாளை நினைத்து பாடினால் பெருமாளின் அருளால் நிச்சயமாக வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.

இதனையும் படியுங்கள் : வெற்றி தரும் பிள்ளையார் மந்திரம்

Recipes AMP · Quick view
View full