காரசாரமான ஆந்திரா ஸ்டைல் கனவாய் மீன்  வறுவல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்!

கனவாய் மீன் கடம்பா மீன் என்று அழைக்கப்படும் இந்த கணவாய் மீன்கள் உடலுக்கு பல நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய மீன்கள். நல்ல கொழுப்பு மீன் அனைத்துக்கும் அருமருந்து கனவாய் மீன். இந்த கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு பொட்டாசியம் கால்சியம் மற்றும் காப்பர் உள்ளது. ஆண்மை குறைபா

By ·

கனவாய் மீன் கடம்பா மீன் என்று அழைக்கப்படும் இந்த கணவாய் மீன்கள் உடலுக்கு பல நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய மீன்கள். நல்ல கொழுப்பு மீன்  அனைத்துக்கும் அருமருந்து கனவாய்  மீன். இந்த கனவாய் மீன்களில் அதிக அளவு நல்ல கொழுப்பு  பொட்டாசியம் கால்சியம் மற்றும் காப்பர் உள்ளது. ஆண்மை  குறைபாடு உள்ளவர்களுக்கு விந்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இந்த மீன்களை வறுவல் செய்து சாப்பிடும்போது அதிக அளவு பலன்கள் கிடைக்கின்றன. இந்த நல்ல கொழுப்புகள் இதயத்தை பாதுகாக்கிறது.

கனவாய் மீன்களுக்கு முள்ளும் கிடையாது முதுகெலும்பும் கிடையாது. இந்த மீன்கள் பார்ப்பதற்கு ஆக்டோபஸ் போலவே இருக்கும் . இந்த கனவாய் மீனின் தலைக்குள் ஒரு சுரப்பி இருக்கும் அதன் சிறப்பு என்னவென்றால் தன்னை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு கருப்பு நிற திரவத்தை பிச்சி அடித்து எதிரிகள் இடம் இருந்து தப்பித்துக் கொள்ளும். இந்த கனவாயை மீனவர்கள் வலை போட்டு பிடித்தால் கூட கிழிந்து விடும் அளவிற்கு இதன் சதைப்பகுதி மெல்லியதாக  இருப்பதால் தூண்டிலில் தான் பிடிப்பார்கள்.

கனவாய் மீனில் பாஸ்பரஸ் காப்பர் கால்சியம் செலினியம் போன்றவைகள் இருப்பதால் இது உடலுக்கு மிகவும் ஊட்டச்சத்தை கொடுக்கின்றன. அதுமட்டுமல்லாது புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதற்கு இந்த செலினியம் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த செலினியம் ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளதால் இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ரத்த சிவப்பணுக்கள் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது . இத்தகைய சத்துக்களை உள்ளடக்கிய கனவாய் மீன் வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை