சுக்கிரன் வக்ர நிவர்த்தி! சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!
ஒருவரின் வாழ்வில் சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஜாதகருக்கு சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த ஜாதகர் அற்புதமான பலன்களை அனுபவிப்பார். அப்படிப்பட்ட சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு
ஒருவரின் வாழ்வில் சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஜாதகருக்கு சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த ஜாதகர் அற்புதமான பலன்களை அனுபவிப்பார். அப்படிப்பட்ட சுக்கிர பகவான் மாதம் ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்வார். அவரே வக்கிரகதிர்யில் சஞ்சாரம் செய்யும் போது பலன்கள் வழங்குவதிலும் மாற்றம் இருக்கும். ஏப்ரலில் மாதத்தில் சுக்கிரன் தனது போக்கை மாற்றுகிறார். ஏப்ரல் 13ம் தேதி மீன ராசியில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைவதால், சில ராசிகளின் வாழ்க்கையில் சோதனைகள் ஏற்படும் வெற்றிப் பாதையில் தடைகளும் ஏற்படும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிகள் சுக்கிரனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வேலையில் தொழிலில் குழப்பம் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் எச்சரிக்கை தேவை. காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுத்தால் பிற்காலத்தில் அதனால் பிரச்னைகள் வரலாம். தேவையில்லாத பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டிய நேரம் இது. தவறான முடிவுகளைத் தவிர்க்க பெரியவர்களின் ஆலோசனை அவசியம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்மம்
சிம்ம ராசிகளுக்கு சுக்கிரனின் வக்ர நிவர்த்தியினால் பணியிடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். மனதில் லேசான பதற்றம் இருக்கும். திருமணம் குறித்த முடிவுகளுக்கு சம்மதம் தெரிவிக்கவோ மறுப்பு தெரிவிக்கவோ தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். பணச் செலவுகள் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் தடை ஏற்படலாம். அனைத்தையும் சாதுர்யமாக சமாளிக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிகளுக்கு சுக்கிரனின் வக்ர நிவர்த்தியி சாதகமற்றதாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் சண்டைகள் அதிகரிக்கலாம். தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மன உளைச்சல் இருக்கலாம். நண்பர்கள் திருமண – காதல் வாழ்க்கையில் சரியாகத்தான் வழிகாட்டுகிறார்களா என்ற சந்தேகம் வரும். எனவே உங்களின் நலம் விரும்பிகளைக் கேட்டு முடிவெடுக்க வேண்டியது அவசியம். திருமண முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் நிதானம் தேவை.
பரிகாரம்
64 பைரவர்களில் ஒருவரான ருரு பைரவரின் காயத்ரி மந்திரமான, ‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே டங்கேஷாய தீமஹி தந்நோ: ருருபைரவ பிரசோதயாத்’ என்பதை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டால் வளமான வாழ்க்கை வாழலாம்.
இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்