ஆடி மாதம் சுமங்கலி பூஜை செய்யும் முறை!!

அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம். ஆடி மாதத்தில் அம்மன் வீடு தேடி வருவதற்கு செய்ய வேண்டிய பல பூஜை முறைகள் உள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் அனைத்து விதமான மங்கலங்களும் நிறைந்து இருக்க சுமங்கலி பூஜை கட்டாயமாக செய்ய வேண்டும். வருடத்தில் ஒரு முறை அல்லது

By ·

அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம். ஆடி மாதத்தில் அம்மன் வீடு தேடி வருவதற்கு செய்ய வேண்டிய பல பூஜை முறைகள் உள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் அனைத்து விதமான மங்கலங்களும் நிறைந்து இருக்க சுமங்கலி பூஜை கட்டாயமாக செய்ய வேண்டும். வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை சுமங்கலி பூஜை வீட்டில் செய்தால் தெய்வங்களுடைய அருளை பெற முடியும். அப்படிப்பட்ட சுமங்கலி பூஜை என்பது அம்மனுக்கு உகந்த நாட்களில் செய்வது மிகவும் சிறப்பானது. சுமங்கலி பூஜை செய்யும் பொழுது பக்கத்தில் உள்ள சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு ஒரு சில மங்களமான பொருட்களை கொடுப்பதன் மூலம் அம்மனே நம்முடைய வீட்டிற்கு வருவதாக ஒரு நம்பிக்கையே உள்ளது. ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானது அந்த சுமங்கலி பூஜையை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

சுமங்கலி பூஜைக்கு முன்பாக செய்ய வேண்டிய சில விஷயங்கள்

சுமங்கலி பூஜையை மாலை நேரத்தில் செய்வது சிறப்பானது ஆனாலும் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து குங்குமத்தை கொடுக்க வேண்டும். மேலும் சுமங்கலி பூஜை செய்வதற்கு முன்பாக வீட்டில் உள்ள பூஜை அறையில் அனைத்து தெய்வங்களுக்கும் சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பிறகு சுமங்கலி பூஜை எந்த இடத்தில் செய்கிறோமோ அந்த இடத்தில் வெற்றிலை அரச இலை அல்லது வாழையிலே இவை மூன்று ஏதாவது ஒரு இலையை 9 என்ற எண்ணிக்கையில் வைத்து 9 அகல் விளக்குகளை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்ற வேண்டும். அதற்கு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்கள் அமர்வதற்குரிய இடத்தில் வஞ்சல் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்து விரிப்பு அல்லது மனை பலகை விரித்து தயாராக வைக்க வேண்டும்.

பூஜை செய்யும் முறை

சுமங்கலி பெண்கள் வீட்டிற்கு வரும் பொழுது அவர்களுக்கு முதலில் குங்குமம் கொடுத்து தண்ணீர் கொடுத்து அவர்களுக்கு உரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் பிறகு 9 விளக்குகளையும் ஏற்ற வேண்டும். சுமங்கலிகளின் நெற்றியில் குங்குமம் வைத்து மாலை சூட்டி வளையல் அணிவித்து அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அம்மனுக்கே செய்வது போல் உணர்ந்து மனதார செய்ய வேண்டும். செய்து முடித்த பிறகு திரும்பவும் அவர்கள் நெற்றியிலும் குங்குமத்தை வைத்து தீப ஆரத்தி காட்டி அவர்களுடைய காலை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு எத்தனை சுமங்கலி பெண்களை நாம் வீட்டிற்கு அழைத்தோமோ அத்தனை பேருக்கும் செய்து முடித்த பிறகு அவர்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும். இறுதியாக அவர்களுடைய கையில் மஞ்சள் குங்குமம் மருதாணி வளையல் ஜாக்கெட் துணி பூ வெற்றிலை பாக்கு பழங்கள் என உங்களால் முடிந்தவற்றை கொடுத்து வழி அனுப்ப விட வேண்டும். இப்படி ஆடி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்வதன் மூலம் சுமங்கலி பெண்கள் என்று ரூபத்தில் அம்மனே வீடு தேடி வந்து அனைத்து விதமான செல்வங்களையும் தருவாள்.

இதனையும் படியுங்கள் : ஆடி கடைசி வெள்ளி வழிபாட்டு முறை

Recipes AMP · Quick view
View full