ஆடி மாத சிறப்பு!!!!

சூறைக்காற்றோடு அம்மனின் அருள் காற்றும் அரவணைக்கும் மாதம் தான் ஆடி மாதம். மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள் திருவிழாக்கள் போல் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் ,ஆடி அமாவாசை, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் ம

By ·

சூறைக்காற்றோடு அம்மனின் அருள் காற்றும் அரவணைக்கும் மாதம் தான் ஆடி மாதம். மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள் திருவிழாக்கள் போல் கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் ,ஆடி அமாவாசை, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. ஆடி மாதத்தின் தொடக்கமே புண்ணிய காலமாக கருதப்படும்

.

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கும். மழைக்காலத்தோட துவக்கமான இந்த ஆடி மாசத்துல நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும் நோய்கள் பரவாமல் தடுக்கவும், நம் முன்னோர்கள் பல விழாக்களை ஆடி மாதத்தில் கொண்டாடி, அம்மனுக்கு வழிபாடு நடத்துனாங்க.ஆடி மாதம் அம்மியும் நகரும் என்பார்கள்,  அந்த அளவுக்கு பலத்த காற்று ஆடி மாசத்தில் அடிக்கும். காற்று வழியாக தொற்று நோய் பரவும் அபாயம் உண்டு. அதை தடுப்பதற்காகத்தான் ஆடி மாதத்தில் வீட்டிற்கு முன் வேப்பம் கொலைகளை கட்டி வைப்பது வழக்கம். வேப்ப இலை மிகப்பெரிய கிருமி நாசினி என்பதால் கிருமிகள் வீட்டில் வருவது தடுக்கப்படும்.

சித்திரை முதல் ஆணிவரை வெயிலின் ஆர்ப்பாட்டம் அதிகப்படியாக இருக்கும். ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும், அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் . தமிழ் வருடத்தில் ஆடி மாதத்தில் இருந்து தான் அனைத்து விதமான பண்டிகைகளும் தொடங்குகின்றன.. பொங்கல் பண்டிகைக்கு பின் சித்திரை வருட பிறப்பை தவிர வேறு பண்டிகைகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதை சிறப்பிக்கும் விதமாக ஆடி முதல் நாளில் ஆடிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.

பண்டிகைகளின் தொடக்கத்தை கொண்டாட ஆடி முதல் நாளில் வாசலில் காவி கோலம் போட விழா களைகட்ட தொடங்கிவிடும்.இல்லங்களில் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி பாராயணம் செய்வதும் ,சௌந்தர்ய லஹரி பாராயணம் செய்வது, இந்த பிரார்த்தனைகள் ஒரு குடும்பத்தை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டுவரும். அம்மன் தவம் செய்த மாதம் என்பதால் ஆடி மாத செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அம்மனுக்கு உகந்த மாதம், பெண்மை என்னும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் இந்த ஆடி மாதம் .

Recipes AMP · Quick view
View full