- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக கத்தரிக்காய் பெருசா யாருக்கும் பிடிக்காது ஆனா ஒரு சிலருக்கு கத்தரிக்காய் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கத்திரிக்காய் வச்சு காரக்குழம்பு, கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் பொரியல் இதெல்லாம் செஞ்சு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். கத்திரிக்காய் பிடிக்காதவங்களுக்கு என்ன செஞ்சு கொடுத்தாலும் விரும்பி சாப்பிடாம இருக்காங்க அப்படின்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான கத்திரிக்காய் தவா ஃப்ரை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. கத்திரிக்காய் தவா ஃப்ரை செய்வதற்கு ஒரு சூப்பரான மசாலா அரைக்க போறோம். இந்த மசாலா கமகமன்னு அவ்ளோ சூப்பரா இருக்கும்.
இந்த கமகம ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணிடாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. தயிர் சாதம் தக்காளி சாதம் ரசம் சாதம், பருப்பு சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடுறதுக்கு அருமையா இருக்கும். கத்திரிக்காய் வைத்து தவா ஃபிரை செஞ்சா எப்படி இருக்கும் அப்படின்னு யோசிக்காதீங்க. கண்டிப்பா இந்த தவா ஃபரை ரொம்ப ரொம்ப ருசியாவே இருக்கும். இந்த ருசியான தவா ஃபிரை ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
பொதுவா சின்ன குழந்தைகளுக்கு ஏதாவது கிரிஸ்பியாக செஞ்சு கொடுத்தா ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி குழந்தைகள் ஏதாவது கேட்டாங்கன்னா இந்த சூப்பரான தவா ஃப்ரை ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த தவா ஃப்ரை செய்வதற்கு எண்ணெய் நிறைய செலவாகும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் கண்டிப்பாக கம்மியா தான் வெளில கிரிஸ்பியாக உள்ள சாஃப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். காரசாரமாக புளிப்பாக சாப்பிடுவதற்கு சூப்பரான டேஸ்டில் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான கத்தரிக்காய் தவா ஃப்ரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கத்தரிக்காய் தட்டைப்பயிறு பொரியல்
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் சோம்பு மிளகு தனியா பொட்டுக்கடலை மிளகாய் தூள் புளி உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும் அரைத்து வைத்து பொடி கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
சிறிதளவு எண்ணெய் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து கத்தரிக்காயை இடைவெளி விட்டு வைத்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான கத்திரிக்காய் தவா ஃபரை தயார்.






