- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இட்லி தோசைக்கு எப்பவுமே சாம்பார் சட்னி அப்படின்னு ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இந்த தக்காளி கடப்பா ரெசிபி செஞ்சு பாருங்க. தக்காளி கடப்பா ரெசிபி ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி பூரி கூட செம அட்டகாசமா இருக்கும் சில சமயங்களில் சாதத்துக்கு கூட இதை ஊத்தி சாப்பிடலாம். ரொம்ப டேஸ்ட்டான இந்த தக்காளி கடப்பா ரெசிபியை மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க.
நீங்க இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி, எம்டி சால்னா கூட செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை தக்காளி கடப்பா ரெசிபி வச்சு செஞ்சு பாருங்க. இதுக்கு தக்காளி அதிகமாக தேவைப்படுது அப்படின்னு யோசிக்க வேண்டாம் தக்காளி மூணு போட்டாலே போதும். அதிகமான பொருட்களும் சேர்க்க தேவையில்லை. குறைவான நேரத்திலேயே சூப்பரா ரெடி ஆகிடும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க.
ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபி எல்லாருக்கும் ஃபேவரட் ஆகவே மாறிவிடும். எல்லாருக்கும் ஃபேவரட்டான இந்த ரெசிபியை கண்டிப்பா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. தக்காளி கடப்பா ரெசிபில நம்ம தேங்காய் பொட்டுக்கடலை சோம்பு இதெல்லாம் சேர்த்து அரைச்சு சேர்க்க போறதால ரொம்பவே சுவையா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கு அப்புறமா இட்லி தோசைக்கு சட்னியே செய்ய மாட்டீங்க இதுதான் அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சுவையான தக்காளி கடப்பா ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கொத்துமல்லி – தக்காளி தொக்கு
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அதனையும் சேர்த்து குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் பச்சை மிளகாய் பொட்டுக்கடலை சோம்பு சேர்த்து அரைத்து அந்த விழுதையும் கடாயில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தக்காளி கடப்பா தயார்.






