தரித்திரம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!!
நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது என பல விஷயங்கள் நடக்கும். சோகத்துடனும் துன்பத்துடனும் நம் வாழ்க்கையை கழிப்பதை நம்முடைய சூழ்நிலையை வைத்து தீர்மானித்து விடலாம் உடல்நிலை மனநிலை அனைத்தையும் பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கையும் அமையும் நம்முடைய வாழ்க்கை சரியாக அமைந்தால் நல்ல முறைய
நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது என பல விஷயங்கள் நடக்கும். சோகத்துடனும் துன்பத்துடனும் நம் வாழ்க்கையை கழிப்பதை நம்முடைய சூழ்நிலையை வைத்து தீர்மானித்து விடலாம் உடல்நிலை மனநிலை அனைத்தையும் பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கையும் அமையும் நம்முடைய வாழ்க்கை சரியாக அமைந்தால் நல்ல முறையில் வாழலாம். சில சமயங்களில் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்காது அதனை தரித்திரம் நிறைந்த வாழ்க்கை என்றும் கூறுவார்கள். வாழ்க்கையில் உள்ள தரித்திரத்தை போக்கி நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு ஆன்மீகத்தில் நிறைய வழி உள்ளது அதனை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தரித்திரம் நிறைந்த வீடு
வீட்டில் தரித்திரமான நிலை இருந்தால் அது மிகவும் கொடுமையான நிலை என்று கூறலாம். ஒரு குடும்பத்தில் தரித்திரம் இருந்தால் இந்த வீட்டினுடைய நிலை மிகவும் மோசமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் வீட்டில் பண வரவு இருக்காது வறுமை நிறைந்து காணப்படும். இவை அனைத்திலும் மன நிம்மதி கெட்டுப் போகும் நாமும் விரக்தியான ஒரு நிலைமைக்கு கூட சென்று விடுவோம் இதனை மாற்றுவதற்கு நாம் உடனடியாக வழியை கண்டுபிடிக்க வேண்டும்.
தரித்திர நிலையை மாற்ற செய்ய வேண்டியவை
தரித்திர நிலையை மாற்ற முதலில் சோம்பேறித்தனத்தை ஒழிக்க வேண்டும் உழைப்பில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். எப்படி உழைத்தாலும் முன்னேற முடியவில்லை தரித்திரம் தாண்டவம் ஆடுகிறது என்றால் ஒரு சூட்சும வழிபாட்டை பின்பற்றலாம். இந்த வழிபாட்டை பெண்களை விட ஆண்கள் தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்ய முடியாத சூழ்நிலையில் பெண்கள் செய்யலாம். இதற்கு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் மாதத்தில் ஒரு நாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். மாதத்தில் ஒரு நாள் கோவிலுக்கு சென்றாலே இந்த நிலை மாறிவிடும்.
தரித்திரம் நீங்க கோவிலுக்கு செல்ல வேண்டிய ஆண்மகன்
குடும்பத்தில் உள்ள ஆண்மகன் பாதத்தில் ஒரு நாள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலில் நடக்கும் வழிபாட்டிற்கு செல்ல வேண்டும். அந்த வழிபாட்டில் கிடைக்கின்ற அபிஷேக நீரை வீட்டிற்கு கொண்டு வந்து வீட்டில் தெளித்து விட வேண்டும். இந்த சூட்சும பரிகாரத்தை செய்வதன் மூலம் அபிஷேக தண்ணீரை வீட்டில் தெளிப்பதன் மூலம் நிச்சயமாக வீட்டில் உள்ள சூழ்நிலை மாறிவிடும். அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று வழிபடுவது மட்டுமே மிகவும் முக்கியம் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே இதனை செய்தால் போதுமானது. ஒரு சிலர் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே சென்றால் அதற்கான பலன் கிடைக்குமா என்று யோசிப்பீர்கள். இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக நன்மை கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் தரித்திரம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை!