செல்வம் சேர உதவக்கூடிய தென்மேற்கு மூலை!!
செய்யும் தொழிலில் நன்கு வளர்ச்சி ஏற்பட்டால் நம் வீட்டில் செல்வம் அதிகமாக சேரும். இல்லை என்றால் ஒரே மாதிரியாக நம் வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும். செல்வம் உயர்ந்து வாழ்க்கை தரம் உயர்வதற்கு பீரோவின் தென்மேற்கு மூலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய
செய்யும் தொழிலில் நன்கு வளர்ச்சி ஏற்பட்டால் நம் வீட்டில் செல்வம் அதிகமாக சேரும். இல்லை என்றால் ஒரே மாதிரியாக நம் வாழ்க்கை முன்னேற்றம் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும். செல்வம் உயர்ந்து வாழ்க்கை தரம் உயர்வதற்கு பீரோவின் தென்மேற்கு மூலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
வளர்பிறை வெள்ளிக்கிழமை
செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய மகாலட்சுமி தேவியாரை நாம் எப்பொழுதுமே வழிபட வேண்டும். அதிலும் தொழில் வளர்ச்சி அடைவதற்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தேவியாரை பூஜை செய்து வழிபட வேண்டும். வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமிக்கு தனி பூஜைகள் செய்து வழிபட்டு வந்தால் நிச்சயமாக நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் கிடைக்கும்.
மகாலட்சுமி தேவியாருக்கு பூஜை
மகாலட்சுமியின் திருவுருவப்படத்தை வீட்டில் எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும். தாமரை மீத அமர்ந்து கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் படம் வீட்டில் இருப்பது நல்லது. மகாலட்சுமி நிற்கும் படியான படங்களை வாங்க வேண்டாம். வளர்பிறை வெள்ளை கிழமை என்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டை சுத்தம் செய்து மகாலட்சுமி படத்திற்கு சந்தனம், ஜவ்வாது வைத்து பொட்டு குங்குமம் வைத்து கலசம் ஒன்றில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். அந்த கலசத்தில் பச்சை கற்பூரம் துளசி இலைகளை போட வேண்டும். இந்த நறுமணம் மகாலட்சுமி தேவியாருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவருடைய அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
முடிச்சாக கட்டி வைக்க வேண்டிய சில பொருட்கள்
அதன் பிறகு ஒரு வெள்ளை பட்டு துணியில் நறுமணம் அதிகமாக இருக்கக்கூடிய பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சில பொருட்களை எல்லாம் வைக்க வேண்டும். அந்த துணியில் ஜவ்வாது, பச்சை கற்பூரம், வசம்பு ஆகியவற்றை வைக்க வேண்டும். அதன் பிறகு கிராம்பு சோம்பு, ஏலக்காய் சுருள்பட்டை ஜாதிக்காய் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டாலே போதுமானது. பிறகு புதிய சில்லரை நாணயங்களை போட்டு ஒரு முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும். பசு கோமியம் பால் தயிர் சாணம் நெய் போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட பஞ்சகாவ்ய விளக்கு இருந்தால் அதில் விளக்கு ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து பிறகு அந்த மூட்டையை கொண்டு போய் பீரோவில் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். அதன் பிறகு நாம் வேலைக்கு செல்ல வேண்டும். மூட்டையில் இருக்கக்கூடிய பொருட்களை மாதம் ஒருமுறை வரக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று மாற்றி விட வேண்டும். பின்பு மறுபடியும் பீரோவில் பழையதை அகற்றிவிட்டு புதியதை வைக்க வேண்டும். தொடர்ச்சியாக இதே போல் செய்து வந்தால் நிச்சயமாக தொழில் வளர்ச்சி அடையும். உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் செல்வம் உயர்ந்து முன்னேற்றம் ஏற்படும்.
இதனையும் படியுங்கள் : கேட்ட வரத்தை கொடுக்கும் தாமரை பூ பரிகாரம்!!