சத்தான அதேசமயம் விரைவாக செய்யக்கூடிய தினை உப்புமா இப்படி செய்து பாருங்கள் உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மி

By ·

தினமும் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி என்று செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்யலாமா! காலை உணவினை சத்தான ஆகாரமாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் நாம் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். அப்படிப்பட்ட சத்தான காலை உணவினை தான் இன்று நாம் காண உள்ளோம். வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது தினை அரிசி. சிறு தானியங்களில் தினை முக்கியமானது. ஆனால் எப்பொழுது வெள்ளை அரிசியின் பயன்பாடு அதிகரித்ததோ அன்றிலிருந்து தினை உள்ளிட்ட சிறுதானியங்களின் நுகர்வு வெகுவாகக் குறைந்துள்ளது.

தினை அரிசியில் அதிகப்படியான கால்சியம் உள்ளது. தினையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகம். அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு அதிக நார்சத்து கொண்ட தானியம் தினை. சொல்லப்போனால் தினையை வைத்து பல வகையான உணவுகள் செய்யலாம். தோசை, ஊத்தப்பம், புலாவ், உப்புமா என எது வேண்டுமானாலும் செய்யலாம். இருப்பினும் பலர் அவற்றை சாப்பிட விரும்புவதில்லை. இப்போது தினை உப்புமா செய்வது எப்படி என பார்க்கலாம். காலை வேளையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு மிகவும் எளிமையான காலை உணவு செய்ய வேண்டுமானால் இந்த தினை உப்புமா செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.

இதனையும் படியுங்கள் : சூப்பரான மற்றும் ஆரோக்கியமான தினை பாலக் புலாவ் வெறும் 20 நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் சுவையான லஞ்ச் தயார்!!!

Recipes AMP · Quick view
View full