பணம் நிரந்தரமாக தங்க நம்மிடத்தில் இருக்க வேண்டிய இரண்டு இலைகள்!!
நம் வாழ்க்கையில் நமக்கு பணம் தான் மிகவும் முக்கியமான ஒன்று. பணத்தை சம்பாதிக்க தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம் பணம் இல்லை என்றால் எதுவும் நீ செய்ய முடியாது என்ற அளவிற்கு பணத்தின் ஆதிக்கம் இந்த உலகத்தில் நிறைந்துள்ளது. பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது பணம் வீண் விரயமாக கூடா
நம் வாழ்க்கையில் நமக்கு பணம் தான் மிகவும் முக்கியமான ஒன்று. பணத்தை சம்பாதிக்க தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம் பணம் இல்லை என்றால் எதுவும் நீ செய்ய முடியாது என்ற அளவிற்கு பணத்தின் ஆதிக்கம் இந்த உலகத்தில் நிறைந்துள்ளது. பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது பணம் வீண் விரயமாக கூடாது என்று எண்ணித்தான் அனைவருமே பணத்தை சேமித்து வைக்க நினைப்போம். சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைத்தால் அது நமக்கு பிற்காலத்தில் உதவியாக இருக்கும். எனது அந்த பணத்தை சேமிப்பதற்கு பணம் நம் கையில் எப்பொழுதுமே தங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.
மகாலட்சுமி தாயார்
பணம் என்ற சொன்னதும் நமக்கு ஞாபகத்திற்கு வரும் தெய்வம் மகாலட்சுமி தேவியார் தான். மகாலட்சுமி தயார் உடைய முழு அனுக்கிரகம் நமக்கு கிடைத்தால் பணம் நம்மிடத்தில் நிலையாக இருக்கும். எனவே மகாலட்சுமி தாயாரை எப்படி வசியம் செய்து பணத்தை நம்மிடத்தில் நிலையாக தங்க வைப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
வெற்றிலை
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த பொருட்கள் என்ற ஒன்று நிச்சயமாக இருக்கும். அதனை வைத்து வழிபாடு செய்யும்போது நிச்சயமாக அந்த தெய்வம் நமக்கு வேண்டியதை கொடுக்கும். மேலும் அந்த பொருளை நாம் வீட்டில் வைத்திருந்தால் வீட்டிலும் தெய்வமும் நிலையாக இருக்கும் என்றும் கூறுவார்கள். எந்த வகையில் அனைத்து தெய்வத்திற்கும் உகந்ததாக கருதப்படுவது தான் வெற்றிலை. வெற்றிகளை குவிக்கக்கூடிய இலை என்பதால்தான் இதற்கு வெற்றிலை என்று பெயர் வந்தது. மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெற்றிலை நம் வீட்டில் இருந்தால் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது மேலும் எந்த ஒரு வீட்டில் வெற்றிலை வாடுகிறதோ அந்த இடத்தில் மகாலட்சுமி தாயார் வாசனை செய்ய மாட்டாள் என்றும் கூறப்படுகிறது.
வெற்றிலையோடு சேர்த்து வைக்க வேண்டிய பொருட்கள்
வெற்றியைக் கொடுக்கக்கூடிய மகாலட்சுமி தாயாருக்கு உகந்த இந்த வெற்றிலையில் மூன்று திருநீற்று பச்சை இலையையும் ஒரு பச்சை கற்பூரத்தையும் வைத்து சுருட்டி படம் வைத்திருக்கக்கூடிய பெட்டியில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வீட்டு வாசம் செய்வாள் மேலும் பண வரவையும் அதிகமாக தருவாள்.
பணவிரயத்தை தடுக்கும் பரிகாரம்
இந்த இலைகளை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி வைக்க வேண்டும். சுக்கிர ஓரைகளான காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை இருக்கக்கூடிய சுக்கிர ஓரை நேரத்தில் இலைகளை மாற்றி வைக்க வேண்டும். பழைய இலைகளை யாருடைய கால் தடமும் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். பணம் வைக்க கூடிய இடத்தில் இந்த பொருட்கள் இருந்தாலே பணம் வீண் விரயம் ஆகாது. அதிகமாக பணம் சம்பாதிக்க முடியும். மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இலைகளை வைத்து இந்த எளிமையான பரிகாரத்தை செய்து மகாலட்சுமி தாயாரின் முழு அருளையும் பண வரவையும் எளிமையாக பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கை நிறைய பணம் கிடைக்க தீப வழிபாடு