வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்க, லட்சுமி கடாட்சம் பெருக இந்த விஷயங்களை மட்டும் தினமும் செய்யுங்கள்!!
ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். குடும்பம் ச
ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்து விட்டாலே போதும். நிம்மதிக்கு குறைவிருக்காது. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேண்டும். குடும்பம் சீரும் சிறப்புமாக திகழ்வதற்கு மகாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வை வேண்டும், அவளின் கடாக்ஷம் இருந்தால் தான் சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் நிறைந்திருக்கும் என்கின்றன சாஸ்திர நூல்கள். செல்வ வளத்தை பெருக்கவும் மகாலட்சுமி நம்முடைய வீட்டில் தங்கவும் சில சூட்சுமங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது, அன்னை மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்க வேண்டும் எனில் மற்றும் செல்வ வளம் பெருக வேண்டும் எனில் நாம் வீட்டில் சில எளிய விஷயங்களை செய்தாலே போதும். மகாலக்ஷ்மி தாயார் நிரந்திரமாக நமது வீட்டில் தங்குவதற்கும், அவரின் கடாட்சம் பெறுவதற்கும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
மகாலட்சுமி கடாட்சம் பெருக
உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் வழங்குபவள் அவள். அதாவது, பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள். எட்டு நிலைகளில் அருளும் அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நமக்கு கிட்டும். எனவே வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் விளக்கு ஏற்றி பூஜை செய்தால் மட்டும் போதும் மகாலட்சுமியின் அருள் கிடைத்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு வீட்டில் லட்சுமி தேவியின் கடாட்சம் எப்போதும் இருக்க வேண்டுமென்றால் முக்கியமான 8 விஷயங்களை செய்வது அவசியம். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நாம் செய்ய வேண்டியவை
கோயில்களில் அல்லது வீடுகளில் விருந்தோம்பல், உணவு தானம் செய்வது போன்றவை மிக முக்கியமான தர்ம செயல்கள். அதிலும் ஐந்தறிவு படைத்த உயிரினங்களுக்கு உணவு அளிப்பது புண்ணிய காரியமாகவும், மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும். அதனால் பசு, நாய், காகம், கோழி, பறவை போன்ற உயிரினங்களுக்கு நாம் தினமும் உணவு அளிக்க வேண்டும்.
சங்கில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக கருதப்படுகிறது. அதனால் இதனை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்யலாம். சங்கு மட்டுமில்லாமல் தாமரை பூ மற்றும் துளசி படைத்து வழிபடலாம். துளசியிலும் தாமரை பூவிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம், எனவே துளசியை வழிபடுவது மகாலட்சுமியை வழிபடுவதற்கு சமம். துளசி மற்றும் தாமரை பூவை வீட்டில் வைத்து தினமும் வழிபாடு செய்வது தெய்வ கடாட்சத்தையும், செழிப்பையும் தரும்.
வீட்டில் நெல்லி மரம் வளர்க்கலாம். இது லட்சுமி கடாக்ஷத்தை அதிகரிக்கும், துர்சக்திகள் மற்றும் கண் திருஷ்டியை நீக்கும், மேலும் செல்வ செழிப்பை கொண்டு வரும் என்று கருதப்படுகிறது. வீட்டில் நெல்லி மரம் வளர்க்க முடியாதவர்கள் கண்டிப்பாக தங்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு விருப்பமான, மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக மருதாணி உள்ளது அதனால் பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொள்வதால் ஐஸ்வர்யம் பெருகும்.
வீட்டில் தினசரி கோலம் போடுவது மகாலட்சுமியின் அருளையும், செல்வத்தையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெண்கள் எழுந்ததும் வாசல் சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் பூசி வழிபட வேண்டும்.
நம் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம், பூ, மஞ்சள், புடவை வழங்க வேண்டும் இதனால் லக்ஷ்மி கடாட்சத்துடன் நம் இல்லம் சுபிட்சமாக இருக்கும்.
நம் உள்ளங்கையில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம். எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண் விழிப்பது, மகாலக்ஷ்மி முகத்தில் கண் விழிப்பதற்கு நிகரானது. அதேபோல் காலையில் எழுந்ததும் பசுவை தரிசனம் செய்வதும் விசேஷமானது.
அதிகாலை 5 மணி என்பது பிரம்ம முகூர்த்தம். இந்த வேளையில் எழுந்திருப்பது வீட்டின் தரித்திரத்தைப் போக்கும். அதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த வேளையிலும் மாலையிலும் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். ஐந்து முக விளக்கின் தீபத்தில் அகம் குளிர்ந்து மகாலக்ஷ்மி நம் இல்லத்தில் நிரந்தர வாசம் செய்வாள்.
எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமியை வசியம் செய்ய மற்றும் மகாலட்சுமி நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்க இந்த பரிகாரத்தை மட்டும் வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள்!!