அதிர்ஷ்டமும் வெற்றியும் தேடி வர பூஜை அறையில் வைக்க வேண்டிய ஒரு சில பொருட்கள்!

ஆன்மீக ரீதியாகவும் வாஸ்து சாஸ்திரங்களின்படியும் வீட்டின் முக்கியமான இடமான பூஜை அறையை நாம் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் வீட்டில் செல்வம் மகிழ்ச்சியை நிம்மதி என அனைத்துமே நிலைக்கும். பூஜை அறையில் நாம் தினசரி வைத்து வழிபடக்கூடிய ஒரு சில பொருட்களுக்கு செல்வத

By ·

ஆன்மீக ரீதியாகவும் வாஸ்து சாஸ்திரங்களின்படியும் வீட்டின் முக்கியமான இடமான பூஜை அறையை நாம் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் வீட்டில் செல்வம் மகிழ்ச்சியை நிம்மதி என அனைத்துமே நிலைக்கும். பூஜை அறையில் நாம் தினசரி வைத்து வழிபடக்கூடிய ஒரு சில பொருட்களுக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் ஈர்க்கக்கூடிய சக்தி உள்ளது. ஒரு சில பொருட்கள் வீட்டின் பூஜை அறையில் இருந்தால் வீட்டில் பொருளாதார நிலமை நன்றாக இருக்கும் அதோடு வீட்டில் தெய்வீக அருளும் பல மடங்கு பெருகிக்கொண்டே இருக்கும் பூஜை அறையில் நாம் வைக்கக்கூடிய ஒரு சில பொருட்களால் வீட்டில் தெய்வ சக்தியை எப்பொழுதுமே நிரந்தரமாக தங்க செய்ய முடியும். வீட்டின் பூஜை அறையில் எந்தெந்த பொருட்களை எல்லாம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்‌.

பூஜை அறை

வீட்டில் இருக்கக்கூடிய அறைகளில் எல்லாம் மிகவும் முக்கியமானது பூஜை அறை. மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தால் நாம் செல்லும் இடம் பூஜை அறை தான் எனவே இந்த பூஜை அறையை நாம் எப்பொழுதுமே சுத்தமாகவும் நேர்மறையாற்றலுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை அறையில் இருக்கும் நேர்மறை ஆற்றல் வீடு முழுவதும் பரவி அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் மன மகிழ்ச்சியையும் கொடுக்கும். பூஜை கறையில் நேர்மறை ஆற்றல் இல்லை என்றால் வீட்டில் கஷ்டங்கள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் எனவே பூஜை அறையில் ஒரு சில பொருட்கள் நிச்சயமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தெய்வம் உங்கள் வீட்டில் வந்து நிரந்தரமாக குடியேறும்.

பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பொருட்கள்

விளக்கு

வீட்டில் நாம் நிறைய பொருட்கள் வைத்திருப்போம் ஆனால் வீட்டில் ஒரு அகல் விளக்காவது இருந்தால் தான் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அந்த விளக்கில் தினமும் நெய் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் நல்லெண்ணெய் தீபம் ஆவது ஏற்ற வேண்டும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நெய் தீபம் ஏற்றினால் வீட்டிற்கு மிகவும் நல்லது. வீட்டின் பூஜை அறையில் காலை மாலை என இரு வேலைகளிலும் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள இருள் நீங்கி வீட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும் வாழ்க்கையும் சிறப்பாக ஒளிமயமாக இருக்கும். எனவே வீட்டின் பூஜை அறையில் விளக்கு மிக மிக முக்கியம்.

மணி

நம் வீட்டின் பூஜை அறையில் பணி நிச்சயமாக இருக்க வேண்டும் அது ஒரு புனிதமான சூழ்நிலையை ஏற்படுத்தி எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வரும் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் ஒளி வீடு முழுவதும் தெய்வீக அதிர்வலைகளை பரப்பும் வீட்டில் நாம் பூஜை செய்யும் போது மணி அடித்து கொண்டேன் பூஜை செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது அது வீட்டிற்கு பலவிதமான தெய்வீக தன்மைகளை கொடுக்கும் பூஜைக்கான பலன்களையும் பல மடங்கு அதிகரித்து கொடுக்கும்.

ஊதுபத்தி

வீட்டில் நாம் பூஜை செய்யும் போது ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை ஏற்றினால் பூஜை அறையில் மட்டுமில்லாமல் வீடு முழுவதும் நறுமணம் இருந்து கொண்டே இருக்கும் இது வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளையும் எதிர்மறையாற்றல்களையும் துரத்தி நேர்மறை ஆற்றலை கொடுக்கும். ஊதுபத்தியில் இருந்து வெளிப்படும் நறுமணம் மனதிற்கு நிம்மதியையும் அமைதியையும் கொடுக்கும் இதில் நம்மால் ஒரு தெய்வீகத்தையும் உணர முடியும் மனத்தை ஒரு நிலைப்படுத்துவதற்கு ஊதுபத்தி மிகவும் முக்கியம் எனவே வீட்டின் பூஜை அறையில் ஊதுபத்தி சாம்பிராணி போன்றவற்றை நிச்சயமாக வைத்திருக்க வேண்டும்.

தீர்த்தம்

பூஜை அறையில் தாமிரம் அல்லது செம்பினால் ஆன ஒரு சிறிய பாத்திரத்தில் கங்கை நீர் போன்ற புனித நதிகளுடைய தீர்த்தத்தை வைத்திருப்பது வீட்டில் தீய சக்திகளை அண்ட விடாமல் வீட்டை புனித தன்மையோடு வைத்திருக்கும். வெள்ளிக்கிழமை மற்றும் ஏதாவது ஒரு சுப காரியங்கள் அன்று வீட்டில் இந்த புனித நீரை தெளித்து விட்டால் வீட்டிற்கு தெய்வீகத் தன்மையும் சுபிட்சமும் கிடைக்கும்.

சுவாமி சிலைகள்

விநாயகர் மகாலட்சுமி சிவபெருமான் போன்ற கடவுள்களின் படங்களில் அல்லது சிலைகள் வைத்து வீட்டின் பூஜை அறையில் தினமும் பூஜை செய்து வந்தால் மிகவும் சிறப்பானது. வீட்டில் சிவலிங்கம் வேல் போன்றவற்றை வைத்திருந்தால் வாரத்திற்கு ஒருமுறை நிச்சயமாக அதற்கு அபிஷேகம் செய்து பூஜை செய்து வழிபட்டு வந்தால் வீட்டிற்கு தேவையான செல்வ பலத்தையும் பாதுகாப்பையும் தெய்வீக அருளையும் ஈர்க்கலாம். வீட்டில் நாம் வைப்பதற்கு சுவாமி படங்களை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக சாந்தமான படங்களையும் சிலைகளையும் தேர்வு செய்ய வேண்டும் அதுதான் வீட்டிற்கு மன நிம்மதியை கொடுக்கும்.

மலர்கள்

பூஜை என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது மலர்கள் தான் மலர்கள் இல்லாமல் தெய்வ வழிபாடு செய்தாலும் அது மனதிற்கு நிறைவானதாக இருக்காது. அழகு தூய்மை போன்றவற்றின் அடையாளமாக இருக்கக்கூடிய மலர்களை தெய்வங்களுக்கு நாம் போடும்போது வாழ்வில் செழிப்போம் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். காய்ந்த மலர்களை ஒருபோதும் பூஜை அறையில் வைக்க கூடாது அது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் எனவே தினமும் நாம் பூஜை செய்யும் போது புதிய மலர்களை மட்டுமே வைத்து பூஜை செய்ய வேண்டும்.

புனித நூல்கள்

வீட்டின் பூஜை அறையில் தெய்வீக புனித நூல்களான ராமாயணம் மகாபாரதம் பகவத் கீதை போன்ற நூல்களை வைத்திருப்பது வீட்டில் உள்ள குழந்தைகளின் ஞானத்தை தெளிவுபடுத்தும் இதனை நாம் தொடர்ந்து வாசித்து வந்தால் தெய்வ சக்தியோடு தொடர்பு ஏற்படும் மேலும் மன தெளிவு மனம் ஒருநிலைப்படுதல் போன்றவற்றை நம்மால் உணர முடியும் எனவே வீட்டின் பூஜையறையில் இதில் ஏதாவது ஒரு புனித நூலையாவது வைத்திருக்க வேண்டும்.

இதனையும் படியுங்கள் : லட்சுமி தேவியின் அருளை பெற வீட்டில் வைத்து வணங்க வேண்டிய பொருட்கள்!

Recipes AMP · Quick view
View full