கடன் பிரச்சனையை இல்லாத வாழ்க்கை வேண்டுமா ? வீட்டில் இந்த பொருடகள் இல்லை என்று சொல்ல கூடாது!

ஒரு வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும். சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். அந்த பொருளை இல்லை என்று கூறாத வண்ணம் அந்த பொருள் நம் வீட்டில் இருக்க வேண்டும். மகாலட்சுமி கடாட்சம் உண

By ·

ஒரு வீட்டில் செல்வ செழிப்பு நிறைந்திருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும். சில பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். அந்த பொருளை இல்லை என்று கூறாத வண்ணம் அந்த பொருள் நம் வீட்டில் இருக்க வேண்டும். மகாலட்சுமி கடாட்சம் உண்டாக என்னென்ன பொருட்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் இல்லை என்று சொல்லக் கூடாத பொருள்கள்

இந்த வகையில் முதலில் சமையலறையில் உள்ள பொருள்களை தான் இல்லை என்று சொல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதிலும் குறிப்பாக சமையலுக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பு, அரிசி போன்ற பொருட்களை இல்லை என்று சொல்லக் கூடாது. இவை இரண்டுமே பணவரவுக்கு மட்டும் அல்ல அன்னபூரணி தாயாரின் அம்சம்.

உப்பு மற்றும் சில்லறை

இதில் மிகவும் முக்கியமாய்ந்தது கல் உப்பு, வீட்டில் கல் உப்பு இல்லை என கூறவே கூடாது. கல் உப்பு வைக்கும் ஜாடியில் உப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் கல் உப்பு என்பது மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே கருதப்படுகிறது. அடுத்ததாக சில்லறைகள் வீட்டில் ரூபாய் நோட்டுகள் இருப்பதைவிட சில்லறைகள் தான் அதிகமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மகாலட்சுமி தாயாருக்கு சில்லறையின் சத்தம் மிகவும் பிடிக்கும். ஒருவர் நம்மிடம் வந்து சில்லறை தாருங்கள் என்று கேட்டால் நாம் இல்லை என்று சொல்லக்கூடாது, பார்க்கிறேன் என்று கூற வேண்டும், அல்லது இருந்தால் எடுத்துக் கொடுத்து விட வேண்டும்.

படிப்பு சார்ந்த பொருட்கள்

அடுத்தது பேப்பர், பேனா போன்ற படிப்பு சார்ந்த பொருட்களை யாரேனும் கேட்டால் தேடாத வண்ணம் இருக்க வேண்டும். ஏனென்றால் இவை குருவின் அம்சம்.அதுமட்டுமல்லாமல் இது மாதிரியான பொருட்களை நாம் இல்லை என்று கூறக்கூடாது.

வஸ்திரங்கள்

அடுத்ததாக ஒரு வீட்டில் வஸ்திரங்கள் எப்பொழுதும் இருக்க வேண்டும், இல்லை என்று சொல்லக்கூடாது. யாரேனும் ஆலயத்திற்காக வந்து கேட்டாலோ அல்லது இல்லாதவர்கள் வந்து கேட்டாலோ வஸ்திரங்களை இல்லை என்று சொல்லக் கூடாது. வீட்டில் இல்லை என்றாலும் பார்க்கிறேன் அல்லது பிறகு தருகிறேன் என்ற வார்த்தையை சொல்லி பழகுங்கள்.

தேன்

இவை அனைத்திலும் மிகவும் முக்கியம் வாய்ந்தது தேன். சமையலறையில் தேன் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்று சொல்லக்கூடாது. சாமிக்கு நெய்வேதியம் படைக்கும் முன்னர் சிறிது தேனும் சேர்த்து படைக்க வேண்டும். அதேபோல் வீட்டில் எப்பொழுதும் பூக்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பூக்கள் இல்லாமல் இருக்கக் கூடாது.

பூஜை அறையில் இருக்கும் பொருட்களில் மங்களப் பொருட்களை இல்லை என்று சொல்லக் கூடாது. மஞ்சள், குங்குமம், தாலி சரடு போன்றவை எல்லாம் எப்போதும் இருக்க வேண்டும் அதையும் இல்லை என்று சொல்லக்கூடாது வீட்டிற்கு யாரேனும் வந்தால் நிச்சயமாக இந்த மங்களப் பொருட்களை நாம் கொடுப்பது வீட்டிற்கு நல்ல ஒரு சுபிட்சத்தை தரும். சமையலறையில் எப்படி தேன் இருக்க வேண்டுமோ அதே போல் பூஜை அறையில் குண்டு மஞ்சள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.

மேலே சொன்ன இந்த பொருள்கள் எல்லாம் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை வழங்கக் கூடிய பொருட்கள். நம்மால் முடிந்த அளவிற்கு இந்த பொருட்கள் எல்லாம் சுத்தமாக தீரும் வரை காத்திருக்காமல் வாங்கி வைக்க வேண்டும். ஒரு வேளை இல்லை என்றாலும் அதை கேட்கும் போது இல்லை என்று சொல்லாத அளவிற்கு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதை சரியாக பயன்படுத்தும் போது நம்முடைய குடும்பத்துக்கு வறுமையே வராது.

Recipes AMP · Quick view
View full