Advertisement
ஆன்மிகம்

வீட்டில் பணம், பொருள் நிலையாக இருக்க சமையலறையில் இந்த பொருட்கள் அவசியம் இருக்க வேண்டுமாம்!

Advertisement

வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருப்பதும், தரித்திரம் சூழ்வதும் அந்த வீட்டில் உள்ள பெண்களின் கையில் தான் உள்ளது. அந்த வீட்டில் உள்ள பெண்கள் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறார்கள் என்பதில் அது அடங்கியுள்ளது. நாம் நமது வீட்டில் கடைபிடிக்கும் ஒரு சில விஷயங்கள் நமது வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும். அதன்படி வாழ்க்கையில் நல்ல செல்வ நிலையான வாழ்வை வாழ என்னென்ன மாதிரியான விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரம் சிலவற்றை வகுத்துக் கொடுத்திருக்கிறது. அதைப்பற்றிய தகவலை தான் ஆன்மீக பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் செல்வம் நிலைக்க செய்ய வேண்டியது

முதலில் பிரம்ம முகூர்த்த வேலையில் வீட்டில் விளக்கு ஏற்றும் வழக்கத்தை நம்முள் கொண்டு வர வேண்டும். மற்ற நேரங்களை காட்டிலும் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எந்த வேலையை செய்தாலும் அது சுகமாக முடியும் அதனால்தான் நம் முன்னோர்கள் பிரம்ம முகூர்த்த வேளையில் அவர்களின் வேலையை தொடங்குவார்கள். அந்த வேலையில் எதுவும் செய்ய முடியாதவர்கள் அந்த நாளுக்குரிய விசேஷமான ஹோரையில் அவர்களுடைய பூஜையை செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஹேரையை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் வாழ்வில் சோறை போக மாட்டான் என்ற பழமொழியே உண்டு.

Advertisement

செம்பருத்தி

பூஜை அறை எப்போதும் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும். நாம் கடவுளுக்கு வாசனை மிக்க மலர்களாக அணிந்து விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் ஒற்றை இதழ் செம்பருத்தி மலரை வைக்கும் பொழுது தன ஆகர்ஷணம் அதிகமாக இருக்கும். பூஜை அறையில் எந்த காரணத்திற்காகவும் சில்வர் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பூஜை அறையில் வைக்கும் பாத்திரங்கள் செம்பு, பித்தளை, வெள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றாகத் தான் இருக்க வேண்டும்.

துளசி தண்ணீர்

பூஜை அறையில் தினமும் நெய்வேத்தியம் வைத்து வழிபட முடியவில்லை என்றாலும், ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிறைய வைத்து அதில் துளசி, ஏலக்காய், கற்பூரம் சேர்த்து சாமியின்

Advertisement
முன்பு வைத்து உங்கள் வேண்டுதல்களை முன்வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அந்த நீரை உங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் அருந்துங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கான வழியும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் இந்த துளசி தண்ணீர் உடம்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.

பித்தளை சல்லடை

நம் வீட்டு சமையல் அறையில் எப்பொழுதும் சல்லடை

Advertisement
இருக்க வேண்டும். அரிசி சலிக்க கொஞ்சம் பெரிய பெரிய துளைகள் இட்ட சல்லடை இருக்கும். இந்த சல்லடை முடிந்த வரை அது பித்தளையில் வாங்கி வைக்க பாருங்கள். அதே போல் அரிசி பானையை சமையலறையில் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அரிசி சந்திரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது இது சமையலறையில் வைக்கும் போது நமக்கு அந்தளவுக்கு ஐஸ்வர்யத்தை தராது என்றும் சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யத்தை பெருக்கும்

அதே போல் இந்த அரிசி பானையில் சில்வர் டம்ளர், பிளாஸ்டிக் கப்பு போன்றவை பயன்படுத்தாமல், ஆழாக்கை பயன்படுத்துவது சிறந்தது. அதை போல் ஆழாக்கில் அளந்து எடுக்கும் போது முடிந்த வரையில் நிறைவாக அளந்து எடுத்து போடுங்கள் இது எல்லாம் நம் குடும்பம் மேலும் மேலும் ஐஸ்வர்யாத்தை பெருக்க உதவி செய்யும். நம் வீட்டில் செய்யும் இந்த சின்ன சின்ன மாற்றங்கள் நம்முடைய வாழ்க்கையில் பெரிய பெரிய விஷயங்களை சாதிக்க உதவும். இதில் கூறப்பட்ட தகவல் அனைத்தும் நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டது தான். இந்த மாறுதல்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய மாறுதல்கள் தான் இதனால் எந்த வித பாதிப்பும் யாருக்கும் கிடையாது.

Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

7 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

8 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

10 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

12 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

13 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

14 மணி நேரங்கள் ago