வீட்டில் பணம் அதிகமாக சேர ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை

ஆடி மாதத்தில் அம்மனுடைய மனது குளிர்ந்திருக்கும் அதனால் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த மாதம் ஆடி மாதம் என்று கூறப்படுகிறது. வாழ்க்கையிலும் வீட்டிலும் நன்மைகள் நடப்பதற்கு ஆடி மாதத்தில் அம்மனை முழு மனதோடு வேண்டி கொண்டால் கேட்கின்ற வரங்களை எல்லாம் அம்மன் கொடுப்பார். எனவே முடிந்த வரையில்

By ·

ஆடி மாதத்தில் அம்மனுடைய மனது குளிர்ந்திருக்கும் அதனால் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த மாதம் ஆடி மாதம் என்று கூறப்படுகிறது. வாழ்க்கையிலும் வீட்டிலும் நன்மைகள் நடப்பதற்கு ஆடி மாதத்தில் அம்மனை முழு மனதோடு வேண்டி கொண்டால் கேட்கின்ற வரங்களை எல்லாம் அம்மன் கொடுப்பார். எனவே முடிந்த வரையில் ஒரு அம்மன் கோவிலுக்காவது சென்று அம்மனிடம் வேண்டிய வரங்களை எல்லாம் கேட்டால் அதற்கான பலன்கள் பல மடங்கு கிடைக்கும். ஆடி மாதத்தில் மற்ற தெய்வங்களை விட அம்மன் தான் பல மடங்கு சக்தியோடு இருப்பார்கள். எனவே இந்த ஆடி மாதத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளுக்கும் பல மடங்கு பலன்கள் கிடைக்கும் அது சிறிய வழிபாடாக இருந்தாலும் அது நம்முடைய கஷ்டங்களை தீர்த்து வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை நமக்கு கொடுக்கும்.

ஆடி மாதத்தில் வீட்டில் செய்ய வேண்டியவை

மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில் வேப்பிலை துளசி போன்றவர்களுக்கு சக்தி அதிகமாக இருக்கும். அதனால்தான் ஆடி மாதத்தில் நாம் எந்த வழிபாடு செய்தாலும் அதில் வேப்பிலையை சேர்த்துக் கொள்கிறோம். எனவே நம்முடைய வீட்டின் பூஜை அறையில் வேப்பிலையை வைத்திருந்தால் நம் வீட்டில் உள்ளவர்களை நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம். அது மட்டும் இல்லாமல் வீட்டில் இன்னும் ஒரு சில பொருட்களை நாம் வைப்பதால் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.

வேண்டிய வரத்தை தரும் அம்மன்‌

மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பல விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடக்கும். பக்தர்கள் அளிக்கின்ற காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மன நிம்மதியையும் வாழ்க்கையில் நிறைவையும் அம்பாள் தருவாள். கோவிலுக்கு போகாதவர்களாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களாக இருந்தாலும் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மன் நீங்கள் வேண்டியதை நிச்சயமாக கொடுப்பாள்.

ஆடி மாதத்தில் பெண்கள் செய்ய வேண்டியவை

ஆடி மாதத்தில் வீட்டில் உள்ள பெண்கள் குளித்து சுத்தமாக வீட்டில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். வீட்டின் நிலை வாசலில் ஒரு சொம்பில் தண்ணீர் நிரப்பி அதில் மஞ்சள் குங்குமம் எலுமிச்சை வேப்பிலை மாவிலை போன்றவற்றை போட்டு வைக்க வேண்டும். வீட்டில் தினமும் வாசல் தெளிக்கும் போது அந்த தண்ணீருடன் இந்த தண்ணீரையும் கலந்து வாசல் தெளித்தால் தீய சக்திகள் வீட்டை நெருங்காமல் இருக்கும் அது மட்டுமில்லாமல் வீட்டில் தெய்வீக தன்மையும் அதிகரிக்கும்.

வீட்டில் பண வரவை அதிகரிக்க கூடிய பரிகாரம்

ஆடி மாதத்தின் முதல் நாள் அல்லது ஆடி வெள்ளிக்கிழமையில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு திரவிய பொடி ஒரு ஸ்பூன் ஜவ்வாது பொடி சிறிதளவு மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த பொடிகளை தண்ணீரில் கலக்க வேண்டாம் பொடிகளை மட்டுமே கலந்து வைத்தால் போதுமானது. அந்த கலவையை அப்படியே பூஜை அறையில் வைத்து நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் உங்களுக்கு முடிந்த வரையில் ஏதாவது ஒரு நைவேத்தியம் செய்து அதனையும் வைத்து வழிபடலாம் அதன் பிறகு கற்பூர ஆரத்தி காட்டி விட்டு வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் பீடை பிரச்சனைகள் அனைத்தும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு அந்த பொடியை எடுத்து வீட்டில் ஒரு சில முக்கியமான இடங்களான பணம் வைக்கும் இடம் குழந்தைகள் படிக்கக்கூடிய இடம் தொழில் செய்யக்கூடிய இடம் நிலை வாசல் பீரோ போன்ற இடங்களில் சிறிதளவு தூவி விட வேண்டும்.

கஷ்டங்களை போக்கும் பரிகாரம்

இந்த பொடியில் நாம் கலந்திருக்க கூடிய திரவிய பொடி தெய்வங்களுக்கு அபிஷேகத்தின் போது மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பொடியாகும். ஜவ்வாது பொடி தீய சக்திகளை விரட்டியடிக்கும் தன்மையைக் கொண்டது மஞ்சள் பொடி அம்மனுக்குரிய மங்களகரமான ஒன்று எனவே இந்த மூன்று பொடிகளையும் சேர்த்து வீட்டின் முக்கியமான இடங்களில் நாம் தூங்கி விடும்போது நம் வீட்டில் உள்ள அனைத்து தீமைகளும் விலகி தெய்வீக அருள் நிறைந்திருக்கும் எனவே வீட்டில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.

இதனையும் படியுங்கள் : ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல்கள் சாற்றி வளைகாப்பு செய்வது ஏன்?ஆடிப்பூரம் 2024 எப்போது?

Recipes AMP · Quick view
View full