உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வில்லையா ? இதை செய்யுங்கள் சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வு உங்களைத் தேடி வரும்!

தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி. அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் அனைவருக்கு நினைப்பார்கள். ஆனால் அந்த முன்னேற்றம், ல

By ·

தொழில், வியாபாரம் செய்பவராக இருந்தாலும் சரி, மாத சம்பளத்திற்கு வேலை செய்பவராக இருந்தாலும் சரி. அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை உண்டு. கஷ்டப்பட்டு துவங்கிய தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும் என்று தான் அனைவருக்கு நினைப்பார்கள். ஆனால் அந்த முன்னேற்றம், லாபத்தை அனைவராலும் பெற முடிவதில்லை. எவ்வளவு தான் கஷ்டப்பட்டு இரவு, பகலாக உழைத்தாலும் முன்னேற்றமோ, லாபமோ வருவதில்லை என வேதனைப்படுபவர்கள் தான் அதிகம்.

அப்படி கஷ்டப்படுபவர்கள், தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் சில எளிய தாந்த்ரீக பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே வாழ்வில் மிகப் பெரிய லாபத்தையும், முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் பெற முடியும். தொழில் வளர்ச்சியில் இருக்கும் தடைகள் விலக வேண்டும் என நினைப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

மகாலட்சுமி தாயார்

குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம். அதனால் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்தாலே போதும் நமக்கு சகல சௌபாக்கியமும் வந்து சேரும். தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இந்த மஹாலக்ஷ்மிக்கான‌ பரிகாரத்தை செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.

சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு நாயுருவி பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் இந்த இரண்டு பொருட்கள் மட்டும் தான் தேவை. இதில் நாயுருவி பொடியானது சூரிய பகவானுக்குரியதாக பார்க்கப்படுகிறது. வேலை தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியவராக இருக்கிறார். அதே போல் மஞ்சள் மகாலட்சுமி தாயார் அம்சமாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டையும் சேர்த்து செய்யும் போது இந்த பரிகாரம் உங்களுக்கு பல மடங்கு பலனும் தரும்.

இந்த நாயுருவி பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி இது இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கு வைப்பதற்கு முன்பாக சாம்பிராணி தூபம் போட்டு அதில் இந்த பொடியையும் சேர்த்து போடுங்கள். வேலைக்கு செல்பவர்கள் மாலையில் போட முடியாது என்றால் வீட்டிற்கு எப்போது வந்தாலும் வந்தவுடன் இதை போட்டு விட்டு தீபம் ஏற்றி சிறிது நேரம் கழித்து உறங்க செல்லலாம்.

இந்த பரிகாரத்தை நாம் யாருக்காக செய்கிறோமோ அவர்கள் பிறந்த தினம் அல்லது பிறந்த நாளில் இந்த தூபம் போட நாம் ஆரம்பிக்க வேண்டும். அதன் பின் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்ந்து இதனை செய்து கொண்டு வரலாம். இந்த தூபம் பல தெய்வ சக்தியை அதிகம் கொண்டது. இதை தொடர்ந்து செய்து வழிபட்டு வந்தால் வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

Recipes AMP · Quick view
View full