குரு பெயர்ச்சியால் மோசமான பலன்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!!

2025 மே 14-ஆம் தேதியன்று குரு பகவான் ரிஷப ராசியை விட்டு வெளியேறி மிதுன ராசிக்கு செல்ல போகிறார். இந்த வருடம் குரு பகவான் ஆக்ரோஷமாக நகர்ந்து அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கும் செல்வார். குருபகவானின் இந்த நிலையால் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான சில தாக்கங்களை பெறுவார்கள். அந்த ராசிக்

By ·

2025 மே 14-ஆம் தேதியன்று குரு பகவான் ரிஷப ராசியை விட்டு வெளியேறி மிதுன ராசிக்கு செல்ல போகிறார். இந்த வருடம் குரு பகவான் ஆக்ரோஷமாக நகர்ந்து அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கும் செல்வார். குருபகவானின் இந்த நிலையால் சில ராசிக்காரர்கள் எதிர்மறையான சில தாக்கங்களை பெறுவார்கள். அந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குரு பகவான் மேஷ ராசியிலிருந்து மூன்றாவது வீட்டிற்குள் நுழைவார். குரு பகவான் மிதுன ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுடைய உடல்நல பிரச்சனைகள் அதிகமாகலாம். சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் 50 வயதை தாண்டி உள்ள நபர்களுக்கு ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவைப்படும். ஒரு சிலருக்கு காது மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. இந்த சமயத்தில் உங்களுடைய அறிவை கொண்டு சமூகத்தில் தனித்துவமான ஒரு அடையாளத்தை உங்களால் உருவாக்க முடியும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் தேவை. அதனால் நீங்கள் தினமும் யோகா தியானம் உடற்பயிற்சி போன்றவைகளை செய்யலாம்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி ஆறாவது வீட்டில் நிகழும் எனவே குரு பகவானின் நிலை நன்றாக இருக்கப் போவது கிடையாது. இந்த வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பது உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். உணவில்லா அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை வெளியில் உள்ள கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகள் இருக்கும் அதனால் நிச்சயமாக உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மலச்சிக்கல் வாயு அல்லது அஜீரணம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவீர்கள். தினமும் யோகா தியானம் செய்வது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கும்ப ராசி

குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து ஐந்தாவது வீட்டில் பெயர்ச்சியாக போகிறார். இந்த வீட்டில் குருபகவான் அமர்ந்திருப்பது உங்களுடைய அறிவை அதிகரித்தாலும் உடல் நலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். கும்ப ராசியில் பிறந்தவர்கள் இதயம் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ஒரு சிலருக்கு நெஞ்சில் பிரச்சனையும் ஏற்படலாம். குரு பெயர்ச்சியின் போது சோம்பேறித்தனம் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கவே கொடுக்காது. நீங்கள் எவ்வளவு தான் சுறுசுறுப்பாக உங்களை வைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் நீங்கள் உடல்நலத்தில் பிட் ஆக இருக்க முடியும்.

இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சி பலன்கள் நன்மைகளை மட்டும் பெற போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

Recipes AMP · Quick view
View full