லட்சுமி தாயாரின் செல்ல பிள்ளைகளாக மாற இதெல்லாம் உங்க வீட்டில் இருக்க வேண்டுமாம்!!

வாழ்க்கை வாழ பல விஷயம் முக்கியமானதாக இருக்கிறது. அதில் உடம்பில் உயிர். மனதில் இறைவன் பிறகு ஆரோக்கிய தேகம். அந்த தேகம் பாதுகாக்க நல்ல உணவு. நல்ல உணவிற்கு கையில் பணம். இவை எல்லாம் இருந்தால் தான் மனிதன் ஒரு வாழ்க்கை நன்றாக வாழமுடியும். அப்படியாக இதை எல்லாம் நாம் ஓடி சம்பாதித்தாலும்

By ·

வாழ்க்கை வாழ பல விஷயம் முக்கியமானதாக இருக்கிறது. அதில் உடம்பில் உயிர். மனதில் இறைவன் பிறகு ஆரோக்கிய தேகம். அந்த தேகம் பாதுகாக்க நல்ல உணவு. நல்ல உணவிற்கு கையில் பணம். இவை எல்லாம் இருந்தால் தான் மனிதன் ஒரு வாழ்க்கை நன்றாக வாழமுடியும். அப்படியாக இதை எல்லாம் நாம் ஓடி சம்பாதித்தாலும் அது நம் கையில் தங்க கடவுளின் மஹாலக்ஷ்மியின் அருள் கண்டிப்பாக தேவை. சுக்கிரனுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை நாளன்று அன்னை மகாலட்சுமிக்கு விசேஷமானது. இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு தனி இடம் உண்டு. செல்வத்தின் தெய்வமாக அனைவரும் லட்சுமி தேவியை வழிபடுகின்றனர். லட்சுமி தேவி செல்வம், புகழ் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னம்.

லட்சுமியின் ஆசீர்வாதத்தால் வீடு மற்றும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வம் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே லட்சுமி தேவியை வழிபடுவதால் பொருளாதார நெருக்கடிகள் நீங்குவது மட்டுமல்லாமல் செல்வமும் கிடைக்கும். செல்வம், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியை தரும் சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்தவும் வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாகும். அதிலும், வெள்ளியில் தொட்டதெல்லாம் துலங்க அன்னை அருள் புரிவார். செல்வத்திற்கு உறைவிடமான லட்சுமியின் அருளைப் பெறவும், என்றும் செல்வம் உங்களிடம் தங்கிவிடவும் சில விஷயங்களை செய்ய வேண்டும். அன்னையின் அருளைப் பெற வீட்டில் வைத்து வணங்க வேண்டிய பொருட்களைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.

கஜலட்சுமி

கஜலட்சுமி தாயார் அஷ்ட லட்சுமிகளுக்கும் நடு நாயகமாக நின்று காட்சி தருபவளாக இருக்கின்றார். தன்னுடைய நாற்கரங்களில் இரு கைகளில் தாமரை மலர்களையும், மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரையையும் காட்டி நமக்கு அருளினை கொடுப்பவராக இருக்கின்றார். கஜலட்சுமி என்கிற இந்த ஆதிலட்சுமி நம் ஒவ்வொருவருடைய வீட்டின் நிலைப்படிக்கு மேல் அமர்ந்து உள்ளதாக ஐதீகம் உண்டு. அதனால் வெள்ளி கிழமைகளில் விளக்கு ஏற்றி கஜலட்சுமி தாயாரை வழிபட்டு வரலாம்.

குத்துவிளக்கு

நாம் வாழும் உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நம் உடலும் ஐம்பொறிகளால் தான் இயங்குகிறது. பெண்கள் வைத்திருக்க வேண்டிய நற்குணங்களும் ஐந்து. இவ்வாறு, ஐந்து என்ற எண் நம் வாழ்க்கையில் பிரதானமாக இருக்கிறது. இதனை உணர்த்தும் விதமாகத்தான் திரு விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கில் லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். தினசரி வீட்டில் விளக்கேற்றினால் அங்கு செல்வ செழிப்பு நிச்சயம் இருக்கும்.

மணி பிளாண்ட்

வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை அளித்த நேர்மறை ஆற்றலை கொடுக்கும் செடிகள் ஏராளமாக இருந்தாலும் அதில் மணி பிளான்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டை அழகு படுத்தவும் நேர்மறை ஆற்றலை கொடுக்கவும் மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்க்கலாம். பணவரவை கொண்டு வரும் மணிபிளாண்ட்டை எப்போதும் வீட்டில் வைத்து வளர்ப்பது நல்லது.

கற்பக விநாயகர்

வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்கள் கண்களில்படும்படி கற்பக விநாயகரின் படம் இருந்தால், கண் திருஷ்டி உள்ளிட எந்த தோஷங்களும் ஏற்படாது, வீட்டிற்குள் தீயசக்திகளும் நுழையாது. இந்த விநாயகரை வீட்டில் வைத்து வழிபட்ட பின் அதற்குரிய வேலைகளைத் தொடங்கினால் நிச்சயம் உறுதியாக வெற்றியடையும் என்பது நம்பிக்கையாகும்.

தானம்

தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும் வெள்ளி கிழமைகளில் தானம் கொடுப்பது அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும் என நம்பப்படுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்வதால் அம்மனின் அருள் கிடைக்கும்.‌ அதுவும் வெள்ளி கிழமையில் அம்மன் அபிராமவல்லியை வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.

இதனையும் படியுங்கள் : பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

Recipes AMP · Quick view
View full