சனி பகவானின் அருளை பெற
சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தா
சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தால் பயம் இருக்காது. ஜோதிடத்தில், சனி ஒரு நீதியை விரும்பும் கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. அது ஒரு மனிதனுக்கு அவனது கர்மங்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்களைத் தருகிறது. அதனால்தான் அவர் நீதியின் கடவுள் அல்லது கர்ம பலன்களைக் கொடுப்பவர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனி பகவானின் அருள் நம் மீது இருக்க, நாம் கண்டிப்பாக இவற்றை செய்ய வேண்டும். அவை என்ன என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
சனி பகவான்
சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான்.
இவர் மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சூரிய தேவன் – சாயா தேவி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது.
சனிக்கிழமை தர்மம்
சனியின் அருள் இருந்தால் பரம ஏழையாக இருப்பவர் கூட நாடாளும் அரசனாக முடியும். அதனால் சனிக்கிழமை அதிகாலையில் பிச்சைக்காரர்களை எதில் பார்த்து அவர் ஏதாவது கேட்டால் அது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு தாராளமாக பணம், உணவு போன்ற உபச்சாரங்களைச் செய்தால் சனி பகவான் உங்கள் மீது கருணை கொள்வார். எனவே நாம் பிச்சைக்காரர்களுக்கு உதவ வேண்டும். நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவுகின்றீர்களோ அதற்கேற்ப உங்களுக்குத் தர்மம் வந்து சேரும்.
சனிக்கிழமை சனி பகவான் வழிபாடு
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி, சனி பகவானுக்கு ஒரு சிறு துணியில் எள் முடிந்து, அதை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி கருங்குவளை மலரால் சனி பகவானை அர்சிப்பதோடு, எள் சாதம் நெய்வேத்தியம் செய்வதும் நல்லது. தொடர்ந்து, சனி கவசம் அல்லது காயத்திரி செபம் செய்யலாம். அவரவர் பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபாகவனின் பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது நன்மையான பலன்களை தரும்.
சனிக்கிழமை வாங்க கூடாத பொருட்கள்
சனிபகவானுக்கு உகந்த சனிக்கிழமையில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இரும்பு என்பது சனிபகவானுடைய ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்காதீர்கள். சனிக்கிழமையில் எண்ணெய் வாங்கக்கூடாது. சனி நீராடினால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. அதாவது சனிக் கிழமையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்தால் தோஷங்கள் நீங்கும். ஆனால் எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்த நாள் அல்ல. சனிக்கிழமையில் உப்பு வாங்குவது மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இது கடன் சுமையை அதிகரிக்க செய்யும். மிகவும் பணக் கஷ்டத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக சனிக்கிழமையில் வீட்டிற்கு உப்பு வாங்கக் கூடாது.
சனிக்கிழமை என்ன செய்யலாம்?
தீராத கடன் தீர சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம் செய்யலாம். காகத்திற்கு உணவாக உளுந்தம் பருப்பு அளிக்கலாம். சனிக்கிழமை எள் எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு தீபம் ஏற்றினால் சகல செல்வாக்கும் அதிகரிக்கும். சனிக்கிழமையில் மருத்துவமனை செல்வது, விவசாயம் சார்ந்த செயல்களை செய்யாமல் இருப்பது நல்லது. சனிபகவானை ஆராதித்து மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம். சனிக்கிழமை இந்த விஷயங்களை செய்தால் சனிபகவான் நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வார்.
சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி?
சனிக்கிழமை விரதம் என்பது மிகவும் எளிமையான ஒன்றாகும். காலை எழுந்து, குளித்துவிட்டு பூஜை செய்து,அதன்பின் காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளும் உண்ணாமல், பால், பழம், தண்ணீர் மட்டும் குடித்து விரதம் மேற்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் சனிபகவானுக்கு எள் எண்ணை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பிறகு இரவு வேளை மட்டும் ஏதேனும் ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.
சனிக்கிழமை விரத பலன்கள்
சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனிபகவானை வழிபடுவதால் சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும். அதோடு சனி பகவான் ஆயுள்காரகன் என்பதால் ஆயுள் பலம், ஆரோக்கியம் பெறுவதற்கும், செல்வ வளம் பெறுவதற்கும், நினைத்த காரியம் நிறைவேறுவதற்கும் சனி பகவானின் அருள் மிகவும் அவசியம் ஆகும். அதனால் சனிக்கிழமைகளில் அவரை நினைத்து விரதம் கடைப்பிடிக்கலாம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், இனி வருகின்ற சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று வரலாம்.
இதனையும் படியுங்கள் : கர்ம பலன்களை அளிக்கக்கூடிய சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போவது இந்த ஐந்து ராசிக்காரர்கள் தான்!