தீய சக்திகள் விலக ஊதுபத்தி பரிகாரம்!!
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்ம வினைகள் தான் காரணம் என்றாலும் கூட பிறருடைய தீய எண்ணங்களாலும் தீய பார்வைகளாலும் பொறாமை குணத்தாலும் கூட குறிப்பிட்ட சில நபர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் அதற்கு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் என்று சொல்லிக் கொண்டே ப
ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்ம வினைகள் தான் காரணம் என்றாலும் கூட பிறருடைய தீய எண்ணங்களாலும் தீய பார்வைகளாலும் பொறாமை குணத்தாலும் கூட குறிப்பிட்ட சில நபர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படும் அதற்கு கண் திருஷ்டி ஏவல் பில்லி சூனியம் என்று சொல்லிக் கொண்டே போகலாம் எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் அடித்து விரட்டுவதற்கு பல பரிகாரங்கள் உள்ளது அதனை நாம் செய்தால் நல்ல பலன்களை பெறலாம் அதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதவில் பார்க்கலாம்.
தீய சக்திகளை விளக்கும் ஊதுபத்தி
இந்த தீய சக்திகளை விரட்டுவதற்கு தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டிருந்தாலும் எந்தவித நன்மையும் நடக்கவில்லை என்றால் வீட்டிலேயே இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். அதற்கு நமக்கு தேவையானது ஊதுபத்தி. ஊதுபத்தியை பயன்படுத்தி செய்யக்கூடிய இந்த பரிகாரம் நிச்சயமாக நல்ல பலனை கொடுக்கும்.
ஊதுபத்தி பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியில் இருந்து 12 மணி வரை மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதனை நாம் செய்யலாம். ஊதுபத்தியை பற்றவைத்து கொள்ள வேண்டும் அதிலிருந்து புகை வரும் பொழுது அதனை வீடு முழுவதும் காட்ட வேண்டும். இதற்கு நிறைய ஊதுபத்திகளை எடுத்துக்கொள்ளலாம். காற்றிலே அந்த ஊதுபத்தியில் இருந்து வரும் புகையால் 0927 என்ற எண்ணெய் எழுதும்போது ஊதுபத்தியில் இருந்து சாம்பல் எந்த பொருளின் மீதும் விழக்கூடாது.
பரிகாரத்தை செய்ய வேண்டிய நேரம்
இந்த பரிகாரத்தை அமாவாசை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது மிகவும் நல்லது. இந்த இரண்டு நாட்களிலும் செய்யும்போது தீய சக்திகள் வெளியேறும். அப்பொழுதுதான் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் அந்த வகையில் அதிகப்படியான செலவுகள் எதுவுமே இல்லாத இந்த ஊதுபத்தி பரிகாரத்தை செய்வது மிகவும் சுலபமான ஒன்றுதான். இந்த பரிகாரத்தை செய்யும்போது அந்த குறிப்பிட்ட எண்ணை ஹாலில் எழுதுவது தான் நல்லது. இதனை வீட்டில் யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் முழு மனதோடு செய்ய வேண்டும் பெரிய செலவு இல்லாத இந்த பரிகாரத்தை செய்யும் போது வீட்டில் உள்ள அனைத்து தீய சக்திகளையும் விரட்டி அடிக்கலாம் எனவே கண்டிப்பாக நம்பிக்கை உள்ளவர்கள் இதனை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு செய்ய வேண்டிய விநாயகர் பரிகாரம்!!