உப்பு ஜாடியில் இதை மறைந்து வைத்தால் மட்டும் போதும் கடன்‌ தீர்ந்து பண வரவு அதிகரிக்குமாம்!

இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மனித வழக்கில் மிக மிக முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது. காரணம் அனைவரது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் அவசியமாகிவிட்டது. கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது. பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்

By ·

இன்றைய கால கட்டத்தில் பணம் என்பது மனித வழக்கில் மிக மிக முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது. காரணம் அனைவரது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் அவசியமாகிவிட்டது. கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது. பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர்.

பொதுவாக பலருக்கு தீராத கடன் பிரச்சனை இருக்கும். மாதம் மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பாதி கடனுக்கே செலவிடுகிறோம். எப்படி சமாளிப்பது என்று பலரும் யோசித்து மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். கடன் தொல்லை நீங்க கல்லுப்பு பரிகாரம் மிகசிறந்த ஒன்றாகும். கஷ்டங்களை கொடுக்கும் கடனை கூட மிக எளிதாக கரிக்கக்கூடிய ஆற்றல் கல் உப்பிற்கு உள்ளது. கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

கல் உப்பு

கல் உப்பு மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த பொருளாகும். யார் ஒருவர் வீட்டில் கல் உப்பு நிறைந்து இருக்கிறதோ அந்த வீட்டில் பண வரவு அதிகரித்து இருக்கின்ற கடன் படிப்படியாக குறைந்து பணம் சேருகின்ற சூழ்நிலை உருவாகும் என ஆன்மீக குறிப்பு கூறுகின்றது. அதனால் கல் உப்பு ஜாடியை வெறும் தரையில் அப்படியே வைத்து விடக்கூடாது. கல் உப்பு ஜாடிக்கு அடியில் ஒரு தட்டு வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து அதன் மேல் தான் நாம் கல் உப்பு ஜாடி வைக்க வேண்டும். இப்படி செய்வது மகாலட்சுமி தாயாரை சிம்மாசனத்தில் உட்கார வைப்பதற்கு சமம்.

பரிகாரம் செய்யும் முறை

முதலில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் ஒன்பது கொட்டை பாக்குகள் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் எதுவாக இருந்தாலும் அதையும் இதனுள் வைத்து விடுங்கள். இதில் ஒரு வெள்ளி நாணயம், தங்கம் வாங்கி வைத்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். பின் இதை ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இதனை உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து உங்கள் குலதெய்வத்திடம் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட வேண்டும் என வேண்டிக்கொண்டு இதை உப்பு ஜாடியின் அடியில் வைத்து விடுங்கள்.

இந்த பரிகார முடிச்சு உங்கள் வீட்டு உப்பு ஜாடியினுள் இருக்கும்போது, அந்த உப்பை நம் அசைவம் சமைக்கும்போதும் உபயோகப்படுத்தலாம் தவறில்லை. பெண்களுக்கான மாதவிலக்கு காலங்களிலும் பயன்படுத்தலாம் இது போன்ற எந்த ஒரு கணக்கும் இந்த உப்பிற்கு இல்லை. உங்கள் உப்பு ஜாடியின் அடியில் இந்த முடிச்சு எப்போதும் இருக்க வேண்டும் அவ்வளவுதான். இப்படி செய்வதன் மூலம், முதலில் பணம் வருவதற்கான வழி பிறக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பணம் வீட்டில் தங்க துவங்கும். அப்படி வரும் பணத்தில் உங்களால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். இதனால் எப்போதும் பண வரவு தடையில்லாமல் நமக்கு கிடைக்கும்.

Recipes AMP · Quick view
View full