உங்களின் தலையெழுத்தை மாற்றி பண வரவை அதிகரிக்கும் சக்தி இந்த வசம்பு தீபத்திற்கு உண்டு!
நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை
நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இந்த வழிமுறையை தொடர்ந்து செய்து வரும் பொழுது அதிக அளவு பணம் உங்களிடம் வந்து சேரும்.
வசம்பு பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அதன் அதிசயங்களை தெரிந்தவர்கள் பலருண்டு. வசம்பு செல்வத்தை அதிக அளவு ஈர்க்கும் சக்தி கொண்டது. வசம்பை சுயம்பு என சொல்லலாம். அதாவது சிவபெருமானுடைய ஒரு அம்சம் என கூட சொல்லலாம். மும்மூர்த்திகளும் இணைந்த ஒரு மூலிகை என்று கூட இந்த வசம்பை சொல்லலாம். ஏனென்றால் இந்த வசம்பிற்கு அதிக அளவு நன்மைகளைத் தரக்கூடிய ஏராளமான சக்திகள் அதனிடம் உண்டு.
பெயர் சொல்லாதது என்று கூட சில பேர் இந்த வசம்பை சொல்லுவார்கள். இந்த வசம்பை நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்சில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் திரும்பவும் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்.
வசம்பு தீபம்
இந்த தீபம் ஏற்றுவதற்கு இரண்டு நெல்லிக்காயின் விதைகள் மற்றும் ஒரு துண்டு வசம்பினை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வசம்பு தீப பரிகாரம் செய்வதற்கு முதலில் ஒரு விளக்கை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதில் திரி போட்டு வேப்ப எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் இந்த தீபத்தினை ஏற்றுக் கொள்ளுங்கள் இந்த தீபம் குறைந்தது 3 மணி நேரமாவது நின்று எறிய வேண்டும். தீபம் ஏற்றிய பின் தீபத்தின் முன்னால் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் உங்கள் குலதெய்வத்தை நினைத்து முன் வைக்க வேண்டும். உங்கள் குலதெய்வத்தை நினைத்து நீங்கள் வேண்டிக் கொள்ளும் பொழுது உங்களுக்கு இருக்கும் பிரச்சனை எதுவாக இருந்தாலும் படிப்படியாக குறையத் தொடங்கும்.
பரிகாரத்தை எப்பொழுது செய்ய வேண்டும்
இந்த விளக்கினை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால், குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் ஏற்றும் பொழுது இந்த விளக்கு பரிகாரம் சிறந்த பலனை கொடுக்கும். இந்த விளக்கினை ஏற்றி நீங்கள் தென்மேற்கு திசையில் தான் வைக்க வேண்டும். பொதுவாக யாரும் பூஜை அறையை தென்மேற்கு திசையில் வைக்க மாட்டார்கள், எனவே எது தென்மேற்கு திசை என அறிந்து அங்கு இந்த தீபத்தை நீங்கள் ஏற்றி வந்தால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.