வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேர வேண்டுமா ? கையில் இந்த ஒரு பொருள் இருந்தால் மட்டும் போதும்!

இன்றிய கால கட்டத்தில் பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பணம் இருந்தால் மேட்டுமே நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். வசம்பு பொதுவாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருள். வசம்பை வைத்து ஒரு ஆன்மிக தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆக இந்

By ·

இன்றிய கால கட்டத்தில் பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பணம் இருந்தால் மேட்டுமே நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். வசம்பு பொதுவாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருள். வசம்பை வைத்து ஒரு ஆன்மிக தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆக இந்த வசம்பை நமது வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் வைப்பதன் மூலம் பணம் வரவையும் அதிகரிக்க முடியும் மற்றும் நமது வீட்டிலும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம்.

நமக்கு பல விதத்திலும் நன்மைகள் தரக்கூடியது வசம்பு. எல்லா நல்லதையும் வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு. வசம்பை வைத்து வசியம் செய்யக்கூடிய நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரம் ஆனாலும் அதை முழு மனதுடன் இறைவனை வேண்டி செய்தால் நிச்சயம் நாம் வேண்டிகொள்வது நடக்கும். அந்த வகையில் நாம் இந்த ஆன்மீகப் பதிவில் வசம்பை வைத்து செய்ய கூடிய பரிகாரத்தை பற்றி பார்க்கலாம்.

பல நன்மைகள் தரும் வசம்பு

பெயர் சொல்லாதது என்று கூட சில பேர் இந்த வசம்பை சொல்லுவார்கள். இந்த வசம்பை நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்சில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் திரும்பவும் உங்களுக்கு பணம் கிடைப்பதற்கு உதவியாக இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் அதிகளவு கிடைக்ககூடிய பொருட்களில் ஒன்று தான் இந்த வசம்பு. இந்த வசம்பை நாட்டு மருந்து கடைகளில் தேவையான அளவு வாங்கிக்கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு கண்ணாடி பவுள் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து வசம்பு ஒன்று, நமக்கு தேவையான ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கல் உப்பை கண்ணாடிக் பாட்டிலில் எடுத்து சேர்த்து விடுங்கள். வசம்புக்கு பணத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய சக்தி உண்டு. மாலை நேரத்தில் இதோட பேயரைச் சொன்னால் இதோட சக்தி போயிடுமாம்.

நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ரூபாய் நோட்டை பூஜை அறையில் வைத்து அல்லது உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு அதை இறுக்கமாக மூடி மகாலட்சுமி தாயாரிடம் எனக்கு இருக்கும் கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் வசம்பை அந்த ரூபாய் நோட்டினுள் வைத்து நன்றாக சுருட்டிக் கொள்ளுங்கள்.

அதை ஒரு மஞ்சள் கலர் நூலால் கட்டி கண்ணாடி பாட்டினுள் வைத்து மூடி விடுங்கள். இதை நீங்கள் எங்கே பணம் வச்சிருக்கீங்களோ அங்கே வையுங்கள். பணம் எடுக்கும்போது இது உங்கள் கண்ணில் படக்கூடாது. இதை ஒருமுறை வைத்தால் போதும். வீட்டில் பணம் வர ஆரம்பிக்கும். இதை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம். நீங்கள் இதை மாற்றும் பொழுது இந்த வசம்பை பூமிக்கு அடியில் புதைத்து விடுங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நீங்களும் பணக்காரர் ஆகலாம்.

Recipes AMP · Quick view
View full