உங்களுடைய மொத்த கடனையும் அடைக்கும் சக்தி இந்த ஒரு பொருளுக்க மட்டும் தான் உள்ளது!

கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். மனிதர்கள் மட்டுமா, எல்லா நாடுகளும் கூட கடன் வாங்குகின்றன. ஆனானப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியே கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செ

By ·

கடன் வாங்காத மனிதர்களே இருக்க முடியாது என்பதுதான் யதார்த்தம். மனிதர்கள் மட்டுமா, எல்லா நாடுகளும் கூட கடன் வாங்குகின்றன. ஆனானப்பட்ட திருப்பதி வேங்கடாசலபதி சுவாமியே கடன் வாங்கித்தான் கல்யாணம் செய்து கொண்டார். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை.

எனினும் ஏதேதோ காரணங்களுக்காக கடன் வாங்கத்தான் வேண்டியுள்ளது. அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. என்ன செய்தாலும் ஒரு பக்கம் கடன் பெருகிக் கொண்டே போகிறது என்பதுதான் பலரது கவலை. ஒரு பக்கம் கடன் வாங்கி மறுபக்கம் கடனை அடைத்து, இப்படி எல்லா பக்கமும் கடன் பெருகிக் கொண்டேப் போகிறது என்று கவலைப்படுபவர்களே அதிகம். கடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், விரைவில் தங்களது அனைத்து கடன்களும் அடைவதற்கான வழியை பிறக்க செய்யும் மிக மிக எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப்பதிவில் பார்க்கலாம்.

கடன்‌ அடைவதற்கான குறிப்புகள்

என்னதான் பரிகாரம் செய்தாலும் சிலருக்கு பணம் சேராமல் போவதற்கு அவர்களுடைய கரும வினைகளும் காரணமாக இருக்கலாம். நமது கரும வினைகள் நீங்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலாவதாக காக்கைக்கு உணவு அளித்திடுங்கள் அதாவது எச்சில் படாத உணவை சமைத்தவுடன் காகத்திற்கு வைத்து விடுங்கள். இரண்டாவதாக பசுமாட்டிற்கு தினந்தோறும் தானம் அளித்திடுங்கள். பசு மாட்டிற்கு தானம் அளிக்கும் பொழுது நம்முடைய கரும வினைகள் அனைத்தும் குறைந்து கொண்டே இருக்கும். மூன்றாவதாக மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுங்கள். அப்படி கொடுக்க முடியவில்லை என்றால் இயலாருக்கு அன்னதானம் கொடுங்கள். இப்படி செய்வதன் மூலம் நமது கர்ம வினைகளின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.

வசம்பு

நமக்கு பல விதத்திலும் நன்மைகள் தரக்கூடியது வசம்பு. எல்லா நல்லதையும் வசியம் செய்யக்கூடிய சக்தி இந்த வசம்புக்கு உண்டு. வசம்பை வைத்து வசியம் செய்யக்கூடிய நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரம் ஆனாலும் அதை முழு மனதுடன் இறைவனை வேண்டி செய்தால் நிச்சயம் நாம் வேண்டிகொள்வது நடக்கும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை எந்த நாட்களிலும் நாம் தொடங்கலாம் ஆனால் சக்தி வாய்ந்த நாட்களான அமாவாசை மற்றும் பௌர்ணமியில் செய்தால் மிகவும் பலனளிக்க கூடிய வகையில் இருக்கும். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் வசம்பை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி கொள்ளுங்கள். அந்த நெருப்பில் இந்த வசம்பை சுட்டுக் கொள்ளுங்கள். வசம்பு கருப்பு நிறமாக மாறத் தொடங்கும். வசம்பு கருப்பு நிறமாக மாறியவுடன் ஒரு கோடுகள் அல்லாத வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெள்ளை காகிதத்தில் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவர்களுடைய பெயர் மற்றும் அவர்களிடம் இருந்து வாங்கிய கடன் அடைய வேண்டும் என்று எழுதிக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் குலதெய்வத்தை நினைத்து அப்படியே அந்த பேப்பரை நான்காக மடித்து ஒரு கண்ணாடியில் பாட்டிலில் போட்டு, அதில் பச்சை கற்பூரம் ஒரு சின்ன துண்டு போட்டு மூடி போட்டு அப்படியே வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் யார் கைக்கும் எட்டாமல் வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் கடனை திருப்பித் தருவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். பணம் எந்த ரூபத்தில் ஆவது உங்கள் கைக்கு வரத் தொடங்கும்.

Recipes AMP · Quick view
View full