அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்க்கும் செம்பருத்தி செடி இந்த திசையில் மட்டும் வையுங்கள்!!

நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து கையில் இருக்கும் பணம் அனைத்தும் செலவாகி விடுகிறது. கையில் பணம் வரவும் மாட்டே

By ·

நம்மில் பலருக்கும் பணம் செல்வம் ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது. கைக்கு பணம் வருவதும் தெரியவில்லை, போவதும் தெரியவில்லை, வந்த வேகத்திலேயே மொத்த வருமானமும் போய் விடுகிறது. திடீரென ஏதாவது ஒரு செலவு வந்து கையில் இருக்கும் பணம் அனைத்தும் செலவாகி விடுகிறது. கையில் பணம் வரவும் மாட்டேன் என்கிறது, அப்படியே வந்தாலும் வரும் பணம் கையில் தங்கவும் மாட்டேன் என்கிறது என புலம்பி, வருத்தப்படுபவர்களே அதிகம். பலரிடமும் பணமில்லாத காரணத்தால் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அப்படி அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு அற்புதமான ஒரு எளிய வழிமுறை ஒன்று உள்ளது. இதை செய்தாலே போதும் அதிக அளவு பணம் உங்களிடம் வந்து சேரும். வாருங்கள் அது என்ன வழி என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

செம்பருத்தி பூ

பொதுவாக சிகப்பு நிறம் கொண்ட பூக்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. சிகப்பு நிற பூக்களை வீட்டில் வைத்து வளர்த்தால், அந்த வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்குமாம். மேலும் எதிர்பாராத நஷ்டங்கள் வராதாம். அந்த அளவிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய சிகப்பு நிற பூக்களில் ரொம்பவும் முக்கியமான ஒரு பூ செம்பருத்தி பூ ஆகும். செம்பருத்தி பூக்கள் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மிக்கு பிரியமானதாக நம்பப்படுகிறது. செம்பருத்தி பூ பல வண்ணங்களில் வருகிறது. ஆனால் சிவப்பு செம்பருத்தி மலர் தான் நிதி பிரச்சனைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அதனால் வாஸ்து படி குறிப்பிட்ட திசையில் இந்த செடியை நட்டு வைத்தால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீரும் என நம்பப்படுகிறது.

எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரம் மரங்களையும் செடிகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறது. அந்த வகையில் செம்பருத்தி பூக்களை வீட்டில் நடுவது மிகவும் நன்மை பயக்கும். இந்த செடியை நம்முடைய வீட்டில் நடுவதன் மூலம், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வாஸ்து படி, செம்பருத்தி செடிகளை நம் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் நட வேண்டும். ஏனெனில் இவ்விரு திசைகளிலும் செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாகவும் நல்லதாகவும் கருதப்படுகிறது. வீட்டு வாசல் முன் இந்த செடியை வளர்ப்பது வாஸ்து தோஷங்களை போக்க வல்லது. இந்த செடியை வீட்டில் நட்டால் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும்.

பிரச்சனைகள் தீர

தொழில் வியாபாரத்தில் நிறைய லாபமும் பணமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் இந்த பூக்கள் உங்களுக்கு உதவும். பணப் பற்றாக்குறையால் அவதிப்படுபவர்கள் வெள்ளிக்கிழமையன்று உங்கள் பணப்பெட்டி வைக்கும் அறையில் விநாயகரையும், துர்காவையும் வைத்து அவர்களுக்கு இந்த பூக்களை வைத்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை நீங்கள் 7 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வர பணகஷ்டம் விலகுமாம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பூக்க கூடிய ஒற்றை செம்பருத்தி பூக்களை பூஜை அறையில் உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு வைத்து மனதார வேண்டிக் கொண்டால் உங்களுடைய பணக்கஷ்டம் தீருமாம். கணவன் மனைவி இருவரும் தலையணைக்கு அடியில் செம்பருத்தி பூவை வைத்து தூங்கினால் இருவருக்கிடையே இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : மகிழ்ச்சியாக வாழ வீட்டில் வளர்க்க வேண்டிய செடி ‌

Recipes AMP · Quick view
View full