வீட்டில் பணம் தங்க இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்!!
அன்றைய காலம் முதல் இன்று வரை பலரும் சந்தித்து வருவது நிதி நெருக்கடி தான். வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இதில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. என்ன தான் சம்பாதித்தாலும், பணம் கை
அன்றைய காலம் முதல் இன்று வரை பலரும் சந்தித்து வருவது நிதி நெருக்கடி தான். வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. இதில் இருந்து நிரந்தரமாக விடுபட வேண்டும் என யாருக்கு தான் ஆசை இருக்காது. என்ன தான் சம்பாதித்தாலும், பணம் கையில் தங்கவில்லை என புலம்புபவர்கள் தான் அதிகமானோர். வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அப்படி இருக்கையில் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகளை சரி செய்துவிட்டாலும், சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமும் நிதி நெருக்கடி விலகி பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், வீட்டில் பணம் தங்குவதற்கு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது அது என்னென்ன என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
பணம் வீட்டில் தங்க பின்பற்ற வேண்டிய வாஸ்து
வீட்டில் குப்பைத் தொட்டி தவறான திசையில் அல்லது தவறான இடத்தில் வைத்தால் வீட்டின் செல்வ நிலை பாதிக்கும். வீட்டின் பிரதான நுழைவாயிலில் குப்பைத் தொட்டியை வைக்க கூடாது. ஏனென்றால் குப்பை தொட்டியை அங்கு வைப்பது நம் வீட்டிற்கு வரக்கூடிய மகாலட்சுமியை தடுப்பதாக இருக்கும். அதனால் உங்களின் ஐஸ்வர்யம் குறையும். அதுபோல வீட்டின் ஈசான்ய மூலை எனும் வடகிழக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைக்கவே கூடாது.
தென்கிழக்கு திசை வாஸ்து சாஸ்திரத்தின்படி அக்னி மூலமாகும். இந்த திசையில் சமையலறை அமைப்பது சிறந்தது, ஏனெனில் இது நிதி வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் தொழில் முன்னேற்றம் போன்ற பல நன்மைகளைத் தரும். அங்கு அழுக்கு பாத்திரங்கள், அழுக்கு துணிகளையும் போடுவதை தவிர்க்கவும் என வாஸ்து கூறுகிறது.
வாஸ்து படி, கடிகாரத்தை வடக்கு, கிழக்கு, மேற்கு திசைகளில் வைக்க வேண்டும். வடக்கு குபேரனின் திசை என்பதால், இந்த திசையில் கடிகாரம் வைப்பது செல்வம் பெருக உதவும். கடிகாரத்தை தெற்கு திசையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். கடிகாரத்தை கதவுக்கு மேல் தொங்கவிடாதீர்கள். இது உங்கள் வீட்டில் பெரும் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
வாஸ்து படி, செருப்புகள் மற்றும் ஷூக்களை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும். இவற்றை கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைக்கக் கூடாது. நாம் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும் போது செருப்பை நேராக வைக்க வேண்டும் தலைகீழாக இருக்கக் கூடாது.
படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது உடல்நலக் குறைபாடுகளுக்கும், வாஸ்து ரீதியான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் மாலை 6 மணிக்கு பிறகு நகம் வெட்டக் கூடாது, தலைமுடியை சீவக் கூடாது.
இதனையும் படியுங்கள் : வாஸ்து பார்த்து வீட்டிற்கு குடியேற வேண்டிய அவசியம்