அட்சய திருதியை நாளில் பணப் பிரச்சனைகள் நீங்க சில வாஸ்து குறிப்புகள்!!
அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அட்சய என்ற சொல்லுக்கு அள்ள அள்ள குறையாமல் பெருகுவது என்று பொருள். இந்த நாளில் வாங்கு
அட்சய திருதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் தினமான திருதியை திதியில், கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்து மதத்தில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அட்சய என்ற சொல்லுக்கு அள்ள அள்ள குறையாமல் பெருகுவது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் மங்கல பொருட்கள், செய்யப்படும் தானங்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் வீட்டில் சில குறிப்பிட்ட மாற்றங்களை செய்வதால் வருடம் முழவதும் நம்முடைய வீட்டில் செல்வம் பெருகுவதுடன், வீட்டில் செல்வம் சேருவதற்காக இருக்கும் தடைகள் அனைத்தும் விலகும். வறுமை மற்றும் நிதி பிரச்சனைகள் தீர இந்த நாளில் செய்ய வேண்டிய சில வாஸ்து குறிப்புகள் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
வீட்டில் செல்வம் பெருக வாஸ்து குறிப்புகள்
அட்சய திருதியை நாளில் வீட்டை முழுவதும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். குறிப்பாக வடகிழக்கு மூலையை சுத்தமாக வைத்து மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி நறுமண பொருட்களான அகர்பத்தி, குங்குமம், சந்தனம் பயன்படுத்தி வீட்டை நறுமணமாக வைத்துக் கொள்ளவும். இதை செய்வதன் மூலம் உங்கள் நிதி நிலை மேம்படும்.
அட்சய திருதியை நாளில் வீட்டின் தெற்கே அல்லது தெற்கு மேற்கு பகுதியில் உள்ள மண்ணை சிறிதளவு எடுத்து பூமி தாயாக கருதி பூஜை செய்தால், நிலம் மற்றும் செல்வம் பெருகும்.
அட்சய திருதியை நாளில் வாஸ்து ரீதியாக, மாலை வேளையில் வாசலில் கோலம் போட்டு அதில் குங்குமம், மஞ்சள் வைத்து தீபம் ஏற்றுவது செல்வ வரவை ஏற்படுத்தும்.
அக்ஷய திருதியை நாளில் வீட்டில் மீன் தொட்டி வையுங்கள். இது அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தரும். இந்த வாஸ்து குறிப்பு நல்ல சக்தியை உண்டாக்கும்.
அட்சய திருதியை அன்று வீட்டில் கண்ணாடியை வடக்கு அல்லது கிழக்கு பக்கம் பார்த்து மட்டுமே வைக்க வேண்டும். இது வருமானம் பெருகும் பாதையை உருவாக்கும்.
தண்ணீர் என்பது வளம் மற்றும் பரிசுத்தத்தின் அடையாளம். அதனால் வீட்டில் தண்ணீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யுங்கள். குழாய்களை சரியாக மூடினால் வீண் செலவுகள் குறையும்.
இதனையும் படியுங்கள் : அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்