- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வாழைக்காயை வைத்து வாழைக்காய் புட்டு, வாழைக்காய் பொரியல், வாழைக்காய் வறுவல் அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. அந்த வகையில் வாழைக்காய் வச்சு இந்த சூப்பரான வாழைக்காய் தவா ரோஸ்ட் ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு நம்ம மசாலாவில் தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டிய அவசியம் இல்ல மசாலாவை எல்லாம் சேர்த்து நல்லா கலந்து அப்படியே டிரையான மசாலாவை வாழைக்காயில் நல்லா தடவி இரண்டு பக்கமும் தோசை கல்லில் சேர்த்து ரோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான வாழைக்காய் ரோஸ்ட் தயாராகிவிடும். இதுக்கு நம்ம வீட்ல இருக்கக்கூடிய மசாலாக்கள் மட்டுமே போதுமானது. இதோட டேஸ்ட் அவ்ளோ ருசியாக இருக்கும்.
ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபியை ரசம் சாதம் பருப்பு சாதம் சாம்பார் சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். ஒருமுறை செய்து பார்த்து விட்டால் ரொம்ப ரொம்ப ஈஸியா அடுத்த முறை செஞ்சிடுவீங்க. இதுக்கு நம்ம வாழைக்காயை ரொம்ப லேசா நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு டேஸ்டா இருக்கும். டீ காபியோட ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸா கூட வச்சு சாப்பிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான வாழைக்காய் தவா ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு வாழைக்காய் வறுவல்
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் பெருங்காயத்தூள் உப்பு ரவை அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாழைக்காயை ஸ்லைஸ் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு பக்கமும் வாழைக்காயை தோய்த்து எடுத்து தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து வாழைக்காயை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான வாழைக்காய் தவா ரோஸ்ட் தயார்.






