சொந்த வீடு அமைவதற்கு ஒரு எளிமையான பரிகாரங்கள்

நம்மிடத்தில் என்ன தான் நிறைய பணம் சொத்து என்று இருந்தாலும் நமக்கென நாம் வாழ்வதற்கு என ஒரு வீடு இல்லையெனில் அது மிகவும் சங்கடமாகவே இருக்கும். சொந்த வீடு என்பது பலருக்கு கனவாகவும் ஏக்கமாகவும் இருந்து கொண்டே இருக்கும் விரைவில் இடம் வாங்க வேண்டும் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும்

By ·

நம்மிடத்தில் என்ன தான் நிறைய பணம் சொத்து என்று இருந்தாலும் நமக்கென நாம் வாழ்வதற்கு என ஒரு வீடு இல்லையெனில் அது மிகவும் சங்கடமாகவே இருக்கும். சொந்த வீடு என்பது பலருக்கு கனவாகவும் ஏக்கமாகவும் இருந்து கொண்டே இருக்கும் விரைவில் இடம் வாங்க வேண்டும் வாங்கிய இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும் ஆனால் பணம் இல்லாத காரணத்தால் வீடு கட்ட முடியாமல் அல்லது பாதி கட்டிய வீட்டை முடிக்க முடியாமல் கவலையில் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்களெல்லாம் சொந்த வீடு அமைவதற்கு இந்த எளிமையான இரண்டு பரிகாரங்களை செய்து வந்தால் போதும் சீக்கிரம் சொந்த வீடு கனவு நிஜமாகும்.

சொந்த வீடு அமைய பரிகாரம்

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் அதற்கான முயற்சிகளை செய்பவர்கள் ஒரு சிறிய அகல் விளக்கு எடுத்து அதில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான வாமனரை மனதில் நினைத்துக் கொண்டு சொந்த வீடு வாங்க வேண்டும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும் ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று நம் வீட்டின் அக்னி மூலையான தென்மேற்கு மூலையில் இந்த விளக்கெண்ணெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

விளக்கு பரிகாரம்

பொதுவாக அக்னி திசை என்பது மண்ணுக்கான திசை என்று கூறுவார்கள். அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு உரிய திசை தான் இந்த அக்னி திசை. மூன்றடி நான் கேட்டு மூன்று உலகையும் அளந்தவர் தான் வாமணன் அதனால் அவரை நினைத்து பால் பாயசத்தை நெய்வேதியமாக படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் சீக்கிரத்திலேயே உங்களுக்கு சொந்த வீடு யோகம் அமையும்.

குபேர பரிகாரம்

மற்றொரு பரிகாரம் என்னவென்றால் நம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய காமாட்சி விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு அல்லது நாம் வழக்கமாக பயன்படுத்துகின்ற ஏதாவது ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு அதனை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வெள்ளை நிற பூக்களை வைத்து விளக்கில் நெய் ஊற்றி ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் போட்டு ஒரு சிறிய தட்டின் நடுவே மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேல் நாம் தயார் செய்து வைத்துள்ள நெய் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். தினமும் காலையில் 6 மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த விளக்கை நாம் ஏற்றி வழிபட்டு வந்தால் சீக்கிரம் வீடு கட்டும் யோகம் அமையும். ஐந்து ரூபாய் நாணயம் என்பது குபேரனுக்கு உரிய ரூபாய் இதை விளக்கில் போட்டு ஏற்றுவதால் வீடு கட்டுவதற்கான வீடு வாங்குவதற்கான பணம் நமக்கு ஏதாவது ஒரு வழிகள் எதிர்பாராத விதமாக கிடைக்கும்.

நவகிரகங்களின் அருள்

காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நாம் தீபம் ஏற்ற வேண்டும் ஏனென்றால் இந்த நேரம் என்பது ஞாயிறு-சூரியன், திங்கள்-சந்திரன்,செவ்வாய்-செவ்வாய்,புதன்-புதன்,வியாழன்-குரு, வெள்ளி-சுக்கிரன், சனி- சனி என்று நவகிரகங்களில் பாவ கிரகங்களான ராகு கேதுவை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களையும் குறிக்கின்ற ஹோரை நேரம். எனவே இந்த நேரத்தில் விளக்கேற்றினால் நமக்கு நவகிரகங்களுடைய அருள் கிடைத்து வீடு கட்டுவதற்கான பூமி யோகம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க அபிராமி அந்தாதி பாடல் வரிகளை உச்சரியுங்கள்!

Recipes AMP · Quick view
View full