வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீட்டில் குடியேற வாடகை பணத்தை கொடுக்கும் முன் இப்படி செய்து விட்டு கொடுத்துப் பாருங்கள்!

நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தா

By ·

நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது. சிலருக்கு வீட்டுக்கு மேல் வீடு சேர்ந்து வருமானம் கொழிக்கும் வீட்டு உரிமையாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும். சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் பல்வேறு துன்பத்தில் உழன்று கிடப்பதும் நடக்கும்.

புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும், சொந்த வீடு இருப்பவர்கள் இன்னொரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் இந்த பரிகாரம் செய்தால் கை மேல் பலன் கிடைத்துள்ளதாக வீடு கட்டியவர்கள் அனுபவப்பூர்வமாக கூறியுள்ளனர். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். காரணம் இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுப்பது இந்தக்கிழமையைத்தான். முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய்.

செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அதை கட்டிக்கொள்ளும் யோகம் உண்டாகும். பூமி சம்பந்தமான சொத்துக்களில் லாபம் உண்டாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உயர்ந்து, உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.

செவ்வாயில் முருகர் வழிபாடு

தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப்பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும். அதுமட்டுமல்லாமல் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வரும் பொழுது சொந்த வீட்டிற்க்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு துவரம் பருப்பு மட்டும் தான் தேவை. இந்த பரிகாரம் செய்வதற்காக வெளியில் இருந்து வாங்க வேண்டிய தேவை இல்லை, வீட்டில் இருக்கும் துவரம் பருப்பையே நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். வாடகை வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் மாதா மாதம் வாடகை தர வேண்டும். அந்த வாடகை பணத்தை தான் நாம் இந்த துவரம் பருப்பில் வைத்து கொடுக்க வேண்டும்.

பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் நாம் சிறிய தொகையை கொண்டு கடன்‌ அடைத்தால் மொத்த கடனும் அடைந்து விடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனால் நாம் முடிந்த அளவு நமது வீட்டு வாடகையையும் செவ்வாய்க்கிழமையில் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அதனால் திங்கட்கிழமையிலேயே வாடகை கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு கவரில் வைத்து துவரம் பருப்பு டப்பாவில் வைத்து விடுங்கள். பின்னர் செவ்வாய்க்கிழமையில் வரும் ஹோரை நேரத்தில் உங்கள் வீட்டு வாடகைக்காரரிடம் அந்த தொகையை கொடுத்து விடுங்கள். உங்களுக்கு ஹோரை நேரம் தெரியவில்லை என்றால் காலை முதல் மாலை வரை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த வாடகை பணத்தை தரலாம்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்களுடைய சொந்த வீடு கனவுகள் நினைவாக கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்காக எந்த ஒரு முயற்சி தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றியின் தான் முடியும் அது மட்டும் இன்றி அதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

Recipes AMP · Quick view
View full