- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வெண்டைக்காய் வைத்து சாம்பாரா அப்படின்னு ஒரு சிலருக்கு ஆச்சரியமா இருக்கும். கத்திரிக்காய் சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், பல காய்கறிகள் போட்ட சாம்பார், சுரைக்காய் சாம்பார், சௌசௌ காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் அப்படின்னு எக்கச்சக்கமான சாம்பார் வகைகள் இருக்கு. அப்படி நிறைய சாம்பார் வகைகளை நம்ம செஞ்சு சாப்பிட்டு பார்த்திருப்போம் ஆனா ஒரு சிலர் தான் வீட்ல வெண்டைக்காய் சாம்பார் வைப்பாங்க. ஒரு சிலர் வெண்டைக்காய் வாங்கினாலே புளிக்கூட்டு, வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் பொரியல் இது தான் செய்வாங்க. வெண்டைக்காய் வாங்கி எப்பவும் ஒரே மாதிரியா இப்படி செய்யாம வெண்டைக்காய் வைத்து ஒரு சூப்பரான சாம்பார் வச்சு சாப்பிட்டு பாருங்க.
வெண்டைக்காய் வைத்து சாம்பார் வைக்கும் போது வெண்டைக்காய் வழவழப்பா இருக்கும் அப்படின்னு யோசிக்க வேண்டாம் வெண்டைக்காயை கடாயில் சேர்த்து எண்ணெய் ஊற்றி நல்லா வதக்கிடுங்க. அப்படி இல்லன்னா இந்த வெயில் காலத்துக்கு வெண்டைக்காயை நறுக்கி ஒரு 15 நிமிஷம் வெயில்ல வச்சுட்டு அதுக்கப்புறம் கடாயில் போட்டு வதக்குனீங்கன்னா சீக்கிரமாகவே வதங்கிடும். அதுக்கப்புறம் சாம்பார் வைத்து பார்த்தீர்கள் என்றால் வழவழப்பு தன்மை இருக்காது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். சுவையான இந்த வெண்டைக்காய் சாம்பார் ஒரு தடவ செஞ்சு பாருங்க சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு கூட நல்லா இருக்கும்.
வெண்டைக்காய் சாப்பிடுவது உடலுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒன்னு அதனால வெண்டைக்காய் குழந்தைகள் சாப்பிட மாட்டேங்கிறாங்க அப்படின்னு விட்டுறாதீங்க. அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா செஞ்சு கொடுத்து சாப்பாட்டுல வச்சு கொடுத்துடுங்க. இந்த வெண்டைக்காய் சாம்பார் வைப்பது ரொம்ப ரொம்ப ஈஸி வெண்டைக்காய் சாம்பார் இந்த மாதிரி வச்சு பாத்தீங்கன்னா ஃபேவரட் சாம்பாராகவே மாறிவிடும். கண்டிப்பா இந்த வெண்டைக்காய் சாம்பார் ரெசிபி ஒரு தடவை செஞ்சு பாருங்க இப்ப வாங்க இந்த சுவையான வெண்டைக்காய் சாம்பார் சிம்பிளா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!
Ingredients
Method
குக்கரில் துவரம் பருப்பு சேர்த்து மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து தக்காளியையும் சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
வெண்டைக்காயை நறுக்கி ஒரு கடாயில் சேர்த்து எண்ணெய் ஊற்றி வழவழப்பு தன்மை போக நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள பருப்புடன் சாம்பார் தூள் ஒரு பெரிய வெங்காயம் உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பார் செய்து விட்டால் சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார்.






