இந்த ஒரு வேர் உங்களிடம் இருந்தால் உங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாதாம் அதுமட்டுமல்லாமல் எந்த தீய சக்தியும் நெருங்காது!

மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்தால் செல்வமும் நம் வீட்டில் நிறைந்து இருக்கும். சுத்தமான வாசனை உள்ள இடங்களில் தான் மகாலட்சுமி குடியிருப்பார். அப்படியான வாசனை பொருள்களில் ஒன்றுதான் வெட்டிவேர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு பூரணமாக கிடைக்கும்

By ·

மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்தால் செல்வமும் நம் வீட்டில் நிறைந்து இருக்கும். சுத்தமான வாசனை உள்ள இடங்களில் தான் மகாலட்சுமி குடியிருப்பார். அப்படியான வாசனை பொருள்களில் ஒன்றுதான் வெட்டிவேர். இதை நம் வீட்டில் பயன்படுத்தும் போது மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வை கொடுக்க, உங்களுக்கு வெற்றியை கொடுக்கக்கூடிய சக்தி இந்த வெட்டிவேருக்கு உண்டு. வெட்டிவேர் இருக்கும் இடம் நறுமணமாக இருக்கும். அசுத்தம் நிறைந்த இடத்தில், கெட்ட சக்திகள் நிறைந்த இடத்தில், எதிர்மறை ஆற்றல் நிறைந்த இடத்தில் தான் துர்நாற்றம் வீசும். முதலில் அந்த துர்நாற்றத்தை அடித்து விரட்டக்கூடிய சக்தி இந்த வெட்டிவேருக்கு உண்டு.

வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக மகாலட்சுமியின் அருள் இருக்க வேண்டும். நம் வீட்டு நிலை வாசலில் வெட்டிவேரில் தோரணம் செய்து தொங்கவிட்டால், மகாலட்சுமிக்கு வீடு தேடி வருவார் என்பது ஐதீகம். நம்பிக்கையுடன் இந்த விஷயங்களை செய்தால் நிச்சயம் மகாலட்சுமி அருளை பெறலாம். வெள்ளிக்கிழமை அன்று நம் வீட்டு பூஜை அறையில் இந்த காரியத்தை செய்வதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.

பரிகாரம் செய்யும் முறை

இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமையில் தான் செய்ய வேண்டும். இதற்கு முதலில் வெட்டிவேர் மற்றும் 10 வேப்பிலை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து மனதார உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் நீங்க வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டி நீங்க வேண்டும், மறுபடியும் கண் திருஷ்டி வரக்கூடாது என்றும், வேலையில் இருக்கும் பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் வெட்டிவேரில் பாதி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து வேப்பிலை இலைகளை வைத்து ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி வீட்டிற்கு உட்புற வாசலில் கட்டி தொங்கவிட்டு விடுங்கள். இப்படி செய்தால் நமது வீட்டில் எந்த தீய சக்திகளும் நுழைய முடியாது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருந்தாலும் உடனே வெளியேறிவிடும். இது வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும். இதனை நாம் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வர வேண்டும்.

தொழிலில் வெற்றிப் பெற

நாம் எடுத்து வைத்திருக்கும் மீதி வெட்டிவேரில் ஐந்து வேப்பிலை இலைகளை வைத்து ஒரு வெள்ளை துண்டு பேப்பரில் வைத்து கட்டி விடுங்கள். இதனை நாம் பரிசில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனை நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எடுத்துச் செல்லும் பொழுது நமக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். முக்கியமாக யாருடைய கண் திருஷ்டியும் நம்மில் படாது. இந்த வெட்டிவேரை தொழிலில் செய்யும் இடத்தில் வைத்தால் லாபம் அதிகரிக்கும். தொழில் நஷ்டத்தில் சென்றால் கூட இந்த வெட்டிவேரை நாம் வைக்கும் பொழுது நல்ல முன்னேற்றத்தை காணலாம்

மன தைரியம் இல்லாதவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள் இந்த வெட்டிவேரை வெளியில் செல்லும் பொழுது எடுத்துக்கொண்டு சென்றால் நல்ல பலனை அளிக்கும். இந்த வெட்டிவேர் மற்றும் வேப்பிலையை நம்முடன் வைத்திருக்கும் பொழுது எந்த தீய சக்தியும் நம்மளை அண்டாது. இதனை நாம் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து நிலைவாசல் மற்றும் நாம் வைத்திருக்கும் வெட்டிவேரை மாற்றி வந்தால் நல்ல பலனை நாம் காணலாம்.

Recipes AMP · Quick view
View full