சுக்கிரனும் புதனும் சேர்வதால் இனி இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்ட போகிறது!!

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த வகையில் புதன் மற்றும் சுக்கிரன் எங்கு சந்த

By ·

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த வகையில் புதன் மற்றும் சுக்கிரன் எங்கு சந்தித்தாலும், அந்த ராசிக்காரர்களுக்கு திருவிழா போல மாறி, பணம் கொட்டும் என்பது ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 13 ஆம் தேதி புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் லாப திருஷ்டி யோகம் ஏற்படுகிறது. இது சுபமான யோகமாக கருதப்படுகிறது. இதனால் துலாம், மிதுனம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிகளுக்கு இந்த சேர்க்கை மிகவும் சாதகமாக அமையப் போகிறது. குறிப்பாக, நீண்டகால கனவு நிறைவேறுவதுடன், தொழில், வியாபாரம் உள்ளிட்டவை விரிவடையும். உத்தியோகத்தில் உயர் பதவிகளுக்கு செல்லும் வாய்ப்புள்ளது.

துலாம்

சுக்கிரனின் பலனால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்விலும் நல்ல காலம் பிறக்கப்போகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பெரும்பாலான நோய்கள் குணமாகும். மிக முக்கியமான மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் லாபகரமான தொடர்புகள் ஏற்படும். தொழில் மற்றும் வேலையில் பதவி உயர்வு மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு மட்டுமின்றி, வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் வரும்.

மிதுனம்

உங்கள் வாழ்வின் பொருளாதார நிலையில் இந்த சமயத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். தொழிலும் பண வரவும் அதிகரிக்கும். தனியாரில் வேலை செய்பவர்களுக்கும் இது அதிக பலன்களை வழங்கும். நிதி பரிவர்த்தனைகள் பலனளிக்கும். சொத்தும் கூடுதல் பலன்களை கொடுக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் நாளுக்கு நாள் அதிகரிக்கும். முக்கியப் பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பிரபலங்களுடன் தொடர்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்

தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வணிகத்தில் பெரிய முன்னேற்றம் வரும். இதனால் தொழிலிலும் பண வரவு அதிகரிக்கும். மேலும், வாழ்விலும் பொருளாதாரம் பலமாகும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இருப்பினும், உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில்கள் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டு உறவுகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். திடீர் ஆதாயங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரபலங்களுடன் தொடர்புகள் அதிகரிக்கும். கூடுதல் வருமான வழிகள் விரிவடையும்.

கன்னி

லாப திருஷ்டி யோகத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் வணிகத்தில் பண வரவு என்பது முன்பை விட அதிகரிக்கும். உங்களின் தந்தையிடம் இருந்தும் உங்களுக்கு நிதியுதவி கிடைக்கும். தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வேலைகள் மற்றும் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு சொந்த ஊரிலேயே நல்ல வேலை கிடைக்கும். திறமையான கலைத்துறையினருக்கு விரும்பிய அங்கீகாரம் கிடைக்கும். பிரபலங்களுடன் தொடர்பு ஏற்படும்.

இதனையும் படியுங்கள் : 2025 சனிப் பெயர்ச்சியால் நல்ல காலம் கிட்ட போகும் சில ராசிகள்!

Recipes AMP · Quick view
View full