Advertisement
ஆன்மிகம்

பெண்கள் உடம்பில் இருந்து தங்க நகையை கழட்டும் போது அவசியம் இதை செய்ய வேண்டும்!

Advertisement

குடும்பத்தில் உள்ள பெண்கள் எவ்வளவு தான் நகைகள் வைத்திருந்தாலும் அவர்கள் எப்போதுமே சில நகைகளை நீண்ட காலம் அணிந்து கொண்டிருப்பார்கள். உதாரணமாக கம்மல், செயின், கொலுசு, வளையல் இது போன்று நகைகளை பெண்கள் அலங்காரத்திற்காக அணிவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இப்படி நீண்ட காலமாக அணிந்திருக்கும் நகைகளை பெண்கள் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக, அதாவது நகையே புதிதாக்குவதற்கோ அல்லது நகையை அடகு வைப்பதற்கோ அல்லது நகை சேதாரமாகிவிட்டது அதை சரி செய்ய கொடுப்பதற்காகவும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கழட்டும் பொழுது மறக்காமல் இதை செய்யுங்கள்.

நகையை கழட்டும் போது இதை செய்யுங்கள்

நீங்கள் உங்கள் உடம்பிலிருந்து நகையை கழட்டியதும் கழட்டிய நகையை நன்கு சுத்தம் செய்துவிட்டு ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பின் பூஜை அறையில் விளக்கு ஏற்றி உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து, இந்த சூழ்நிலையின் காரணமாக இன்று நகை கழட்ட வேண்டியதாயிற்று கூடிய சீக்கிரம் இந்த நகையை நான் திரும்ப அணிந்து கொள்வேன் என உங்கள் குலதெய்வத்திடம் கூறி ஒரு துணியில் 11 ரூபாயை முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கழட்டிய இந்த நகையை என்ன காரணத்திற்காக உங்கள் உடம்பில் இருந்து கழட்டினீர்களோ அந்த வேலைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

Advertisement
Advertisement

இந்த பரிகாரம் எதற்கு

இந்த பரிகாரம் எதற்காக என்றால் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்வதற்காக தான் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதனால் நீங்கள் எந்த காரணத்திற்காக நகையை கழட்டி வைத்திருந்து வைத்தாலும் பரவாயில்லை மீண்டும் அந்த

Advertisement
நகை உங்கள் கைகளில் வந்து சேரும். அதற்காக நீங்கள் பூஜை அறையில் முடிந்து வைத்த 11 ரூபாயை குலதெய்வம் கோயிலுக்கு செல்லும்போது குலதெய்வத்தை பூஜை செய்து பின் உண்டியலில் காணிக்கையாக அதை செலுத்தி விட்டு வாருங்கள் கண்டிப்பாக உங்கள் நகை உங்களிடம் வந்து சேரும்.

திரும்ப அந்த நகையை அணியும் போது

பின்பு நீங்கள் உங்கள் உடம்பிலிருந்து கழட்டிய நகைகள் திரும்பி உங்கள் கைக்கு வந்து சேரும் பொழுது அதை நேரடியாக அணிந்து கொள்ளாமல் மறுபடியும் நகையை சுத்தப்படுத்தி பூஜை அறையில் உள்ள உங்கள் குலதெய்வத்தின் திரு உருவப்படத்திற்கோ அல்லது உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் படத்திற்கும் அணிவித்து அதன் பின் அந்த நகையே நீங்கள் அணிந்து கொள்வதால் அந்த நகை உங்களிடமே தங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Advertisement
Prem Kumar

Recent Posts

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

2 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

3 மணி நேரங்கள் ago

சப்போட்டா சாக்லேட் மில்க் ஷேக் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க

ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா பழம் மாதுளை வாழைப்பழம் சப்போட்டா பழம் அப்படின்னு ஏராளமான பழங்கள் இருந்தாலும் கூட ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு…

4 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!

அசைவ வகைகளிலே ஆரோக்கியம் என்பதால் அடிக்கடி செய்வது இந்த மட்டன் தான். பலரும் இந்த மட்டனுக்கு அடிமையாகவே இருக்கிறார்கள். அந்த…

5 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை என்று தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி பொருட்களை வாங்கலாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மாதத்திலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய இந்த திதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அட்சய என்பதற்கு…

7 மணி நேரங்கள் ago

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

8 மணி நேரங்கள் ago