அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெற சொல்ல வேண்டிய வார்த்தைகள்!!
அதிர்ஷ்டகரமான வாழ்க்கை வாழ அனைவரும் விரும்புவார்கள்.இதற்காக பலவிதமான வழிகளை மக்கள் தேடுகிறார்கள். பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்கிறார்கள். ஆனாலும் துரதிர்ஷ்டம் துரத்துகிறது என புலம்புபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். நான் சரியான அதிர்ஷ்டம் கெட்டவன் என்று கூறியும் கேள்விப்பட்டிருக்க
அதிர்ஷ்டகரமான வாழ்க்கை வாழ அனைவரும் விரும்புவார்கள்.இதற்காக பலவிதமான வழிகளை மக்கள் தேடுகிறார்கள். பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்கிறார்கள். ஆனாலும் துரதிர்ஷ்டம் துரத்துகிறது என புலம்புபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். நான் சரியான அதிர்ஷ்டம் கெட்டவன் என்று கூறியும் கேள்விப்பட்டிருக்கிறோம், நாம் செல்லும் முன்னே நம்முடைய துரதிஷ்டம் முன் வந்து நிற்கும் என்று புலம்புபவர்களையும் பார்த்திருப்போம். அப்படி கஷ்டப்படுபவர்கள் செய்யும் எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கவும், சரியான நேரத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட, எளிய சில விஷயங்களை செய்வதன் மூலம் பெற்றிடலாம் என ஜோதிட ஆலோசனை கூறப்படுகிறது. அந்த வகையில் அதிர்ஷ்டம் நம்மை தேடி வருவதற்கு செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் பதிவில் பார்ப்போம்.
துரதிர்ஷ்டம் நீங்கி அதிர்ஷ்டம் பெற
அனைவரின் வாழ்விலும் இன்பம் – துன்பம், ஏற்ற – இறக்கம் ஆகியவை கலந்து தான் இருக்கும். ஆனால் சிலரின் வாழ்க்கையில் பெரும்பாலும் சரிவு நிலையே காணப்படும். பலர் கடினமாகவும், புத்திசாலித்தனமாகவும் வேலைப் பார்த்தும், அதிர்ஷ்டம் இல்லாததால் சில சமயங்களில் வெற்றியை நெருங்க முடியாமல் போகும். நம்மில் சிலர் வாழ்க்கையில் தோல்வி வரும் போது இடிந்து போய் உட்கார்ந்து விடுவார்கள். அப்போது தங்களது அதிர்ஷ்டத்தின் மீது பழிபோடுவார்கள். பலரும் கஷ்டப்பட்டு விடா முயற்சியுடன் பெறக்கூடிய வெற்றியை ஒரு சிலர் எளிதில் பெற்று விடுவார்கள். இதை தான் நாம் அதிர்ஷ்டம் என்று கூறுகிறோம். இதற்கு பலவிதமான கிரக நிலைகள் காரணமாக இருக்கும். நம்முடைய வாழ்விலும் மாற்றம் ஏற்பட வேண்டும், முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பவர்கள் இந்த பதிவில் கூறியுள்ள வழிபாட்டை செய்து பாருங்கள்.
வழிபாட்டு முறை
ஒருவருக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டால் கூரையில் வாழ்பவர் கூட குபேரராய் மாறி விடுவார் இது பலரும் அறிந்தது தான். சரி அந்த அதிர்ஷ்டத்தை எப்படி வர வைப்பது? அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் சில வழிபாடுகளின் மூலம் அதை வர வைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு வழிபாடு தான் நேர்மறையான வார்த்தைகளை கூறுவது. ஆம், மிகவும் நேர்மறையான அதிர்ஷ்டத்தை நம்மிடம் அழைத்து வரக் கூடிய வார்த்தைகளாக இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. அது தான் “அதிர்ஷ்டம் சாஸ்வதம்” என்னும் இரண்டு வார்த்தைகள். இந்த வார்த்தைகளை இவர் தான் கூற வேண்டும், இவர் கூற கூடாது என்று கிடையவே கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இந்த வார்த்தையை கூறலாம். இந்த வார்த்தைகளை கூறும் போது எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் அமரலாம். கண்களை மூடி மூச்சை மெதுவாக உள் இழுத்து வெளிவிட வேண்டும். அதன்பிறகு இந்த வார்த்தையை முழு நம்பிக்கையுடன் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கூற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முழு மனதோடு ஆத்மார்த்தமாக நாம் இந்த வார்த்தைகளை கூறி வரும்போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்குவதோடு அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும் என நம்பப்படுகிறது.
இதனையும் படியுங்கள் : அதிர்ஷ்டம் தரும் தமிழ் ஸ்விட்ச் வோர்ட்