குபேர சம்பத்தை பெற இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்யுங்கள்!!

குபேர வழிபாடு கோடி செல்வத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். வீட்டில் செல்வம் சேர ‌குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். பொதுவாக செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் குபேரரும் செல்வத்தின் அதிபதியாக விளங்குகிறார். மகாலட்சுமி தாயார் செல்வ வளங்

By ·

குபேர வழிபாடு கோடி செல்வத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள். வீட்டில் செல்வம் சேர ‌குபேர வழிபாட்டை தவறாது மேற்கொள்ள வேண்டும். பொதுவாக செல்வத்தின் அதிபதியாக மகாலட்சுமி தேவியையே நாம் குறிப்பிடுகிறோம். ஆனால் குபேரரும் செல்வத்தின் அதிபதியாக விளங்குகிறார். மகாலட்சுமி தாயார் செல்வ வளங்களை பக்தர்களுக்கு வழங்கும் போது, குபேரர் அந்த செல்வங்களை பராமரிப்பதில் அதிபதியாக செயல்படுகிறார். குபேர வழிபாடு மட்டுமின்றி தொடர்ந்து மகாலட்சுமி வழிபாடும் செய்து வருபவர்களின் வாழ்வில் ஐஸ்வர்யத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது நம்பிக்கை. மேலும் குபேர பகவான் சிவபெருமானை நினைத்து தவமிருந்து வழிபாடு செய்ததன் பலனால் குபேரருக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது என்று நம்பப்படுகிறது. அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய நவம்பர் மாதத்தில் குபேரரை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

குபேர சம்பத்து பெற

சம்பத்து என்றால் செல்வம் என்று பொருள். செல்வத்தின் அதிபதியாக விளங்குபவள் லக்ஷ்மி தேவி. அந்த செல்வத்தை பகிர்ந்து அளிப்பவாரக குபேரன் விளங்குகிறார்‌. மகாலட்சுமியை வழிபாட்டினை போன்று, குபேர வழிபாடும் செல்வத்தை பெருக்கக் கூடியதாகும். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும் சிவ பக்தியில் சிறந்த விளங்கியதால் வட திசைக்கு அதிபதியாகவும், செல்வத்திற்கு அதிபதியாகவும் பொறுப்பு பெற்றார். சிவ பெருமானை நோக்கி 800 ஆண்டுகள் தவம் செய்து, அவரின் அன்புக்குரியவராக மாறியவர் குபேரன் என்பதால், குபேரனை வழிபடுவதால் சிவன், மகாலட்சுமி, பெருமாள் போன்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும் என சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட குபேர பகவானின் அருளை பெறுவதற்கு நவம்பர் மாதம் முழுவதும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையைப் பற்றி பார்ப்போம். 

வழிபாட்டு முறை 

இந்த வழிபாடு செய்வதற்கு ஏதாவது ஒரு இனிப்பு அதாவது லட்டு, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு செய்வதற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முகம், கை, கால்களை கழுவி விட்டு அமைதியாக ஒரு இடத்தில் வடக்கு திசை பார்த்து ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். பின் உங்கள் வலது கையில் இனிப்பையும் அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து இடது கையால் மூடிக்கொள்ளுங்கள். உங்களுடைய கைகள் இரண்டையும் நெஞ்சுக்குழியில் குபேர மந்திரமான “ஓம் கும் குபேராய நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். பின் குபேரரின் துதியை ஒரு முறை கூறிவிட்டு குபேர பகவானிடம் உங்கள் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் அதனை முன் வைக்கவும்‌. 

பின் நாம்‌ எடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை அன்றாடம்‌ செலவு செய்யும் பணத்துடன் வைத்து விட்டு, அந்த இனிப்பை வடக்கு திசை பார்த்து வீட்டிற்கு வெளியே தூவி விட வேண்டும். இப்படி இந்த வழிபாட்டை நவம்பர் மாதம் முழுவதும் செய்ய வேண்டும். நாம் எடுத்து வைத்துள்ள ஒரு ரூபாய் நாணயத்தை அருகில் உள்ள பெருமாள் கோயில் உண்டியலில் தினமும் செலுத்த வேண்டும். முடியாதவர்கள் நவம்பர் மாதம் முழுவதும் எடுத்து வைத்துள்ள அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வைத்து நீங்கள் கோவில் செல்லும் போது உண்டியலில் செலுத்தலாம். இப்படி நாம் ஒரு ரூபாய் நாணயத்தையும் இனிப்பையும் கையில் வைத்துக்கொண்டு குபேரரின் மந்திரத்தையும் துதியையும் சொல்லி வழிபடுவதன் மூலம் குபேர சம்பத்து உண்டாகும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறவும்.

இதனையும் படியுங்கள் : பண பிரச்சனையை தீர்க்கக்கூடிய குபேர சனீஸ்வரர் வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full