அடமானத்தில் இருக்கக்கூடிய நகையை திருப்ப பைரவர் வழிபாடு!!
தங்க நகைகளை சேர்ப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்வது சேமிப்பு தான். சிறுக சிறுக பணத்தை சேர்த்து நகையை அனைவரும் வாங்குவது ஆசையாக போட்டுக் கொள்வதற்கு மட்டுமில்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக நகையை அடமானம் வைத்து அதில் வரும் பணத்தை வைத்து குடும்ப சூழலை சமாளிப்பதற்காக தான். ஆனால் ஒரு சில
தங்க நகைகளை சேர்ப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்வது சேமிப்பு தான். சிறுக சிறுக பணத்தை சேர்த்து நகையை அனைவரும் வாங்குவது ஆசையாக போட்டுக் கொள்வதற்கு மட்டுமில்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக நகையை அடமானம் வைத்து அதில் வரும் பணத்தை வைத்து குடும்ப சூழலை சமாளிப்பதற்காக தான். ஆனால் ஒரு சிலர் அடமானம் வைத்த நகைகளை திருப்ப முடியாமல் மிகவும் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆன்மீக வழிபாட்டை செய்து பார்க்கலாம்.
காலபைரவர் வழிபாடு
காலபைரவர் வழிபாடு நம்முடைய கர்ம வினைகளை நீக்கக்கூடிய வழிபாடு. நம்முடைய கர்ம வினைகளை பொறுத்து நமக்கு நன்மை தீமைகளை அளிக்கக்கூடிய சனீஸ்வர பகவானின் குருவாக திகழ்பவர் காலபைரவர். காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும். மேலும் நமக்கு இருக்கக்கூடிய ஸ்வர்ண தோஷம் நீங்குவதற்கு காலபைரவரை வழிபாடு செய்யலாம்.
வழிபாட்டை செய்ய வேண்டிய நாள்
பௌர்ணமி நாளில் அருகில் இருக்கக்கூடிய கால பைரவர் ஆலயத்திற்கு சென்று சிவப்பு நிற மலர்களை வாங்கி கொடுத்து தேங்காய் பழம் போன்றவற்றையும் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கொடுக்கக்கூடிய தேங்காய்கள் நல்லெண்ணெய் அல்லது நெய் அல்லது வேப்ப எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணையை ஊற்றி திரி போட்டு பைரவருக்கு முன்பாக தேங்காய் தீபம் ஏற்ற வேண்டும். அடகு வைத்த நகைகள் அனைத்தும் சீக்கிரத்தில் வீட்டிற்கு வரவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று பௌர்ணமி நாட்களில் பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நிச்சயமாக உங்களுடைய நகை வீட்டிற்கு வரும். சக்தி வாய்ந்த தெய்வங்களில் கால பைரவரும் ஒருவர் அவரின் அருளால் ஸ்வர்ண தோஷம் நீங்குவதோடு அடமானத்தில் இருக்கக்கூடிய தங்க நகைகளும் வீடு திரும்பும்.
இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க குலதெய்வ வழிபாடு