வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தேவியார் வழிபாடு!!

இன்றைய கால சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. வருமானத்தை விட தங்கத்தின் விலை தான் அதிகமாக உள்ளது. நம்முடைய வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என்றால் பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாது தன தானியங்கள் அனைத்தும் நிறைவாக இருக்க வேண்டும். வீட்டில் ஆரோக்கியம் பெருக வேண்டும் என்

By ·

இன்றைய கால சூழ்நிலையில் தங்கத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. வருமானத்தை விட தங்கத்தின் விலை தான் அதிகமாக உள்ளது. நம்முடைய வீட்டில் தங்க நகை சேர வேண்டும் என்றால் பணத்திற்கு பஞ்சமே வரக்கூடாது தன தானியங்கள் அனைத்தும் நிறைவாக இருக்க வேண்டும். வீட்டில் ஆரோக்கியம் பெருக வேண்டும் என்றால் மகாலட்சுமி தேவியை வழிபாடு செய்து வர வேண்டும். இவை அனைத்தும் கிடைப்பதற்கு மகாலட்சுமி தேவியாரை வழிபாடு செய்வதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தேவியார் வழிபாடு

வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள் மகாலட்சுமி பூஜை வீட்டில் செய்ய வேண்டும். மகாலட்சுமி தேவியார் முன்பு இரண்டு மண் அகல் விளக்குகளில் நீ ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். டைமண்ட் கற்கண்டுகளை பிரசாதமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான குடிக்கின்ற தண்ணீர் எடுத்து அதில் இரண்டே இரண்டு குங்குமப்பூவை போட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

குங்குமப்பூ தீர்த்தம்

இந்த குங்குமப்பூ திருத்தத்தை நாம் பூஜை அறையில் வைப்பதன் மூலம் நம்முடைய பீரோவில் பணம் லட்ச லட்சமாக வரும். எனவே குங்குமப்பூ தீர்த்தத்தை தவற விட வேண்டாம். மேலும் மகாலட்சுமி தேவியாருக்கு வெள்ளை நிற மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து ஊதுபத்தி ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பிறகு அந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு டம்ளரின் வாய்ப்பகுதியை உள்ளங்கையை வைத்து மூடி “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே வருக வருக” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி இந்த தீர்த்தத்தை பிரசாதமாக குடிக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த தீர்த்தத்தை குடிக்கலாம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பூஜை செய்து விட்டது இந்த தீர்த்தத்தை குடிக்க நம் வீட்டிற்கு பணம் அதிகமாக சேரும்.

இந்த வழிபாட்டை செய்ய வேண்டிய நேரம்

இந்த வழிபாட்டை மதிய நேரத்தில் 1:00 மணியில் இருந்து 2:00 மணிக்குள் செய்யும் போது பல மடங்கு பலன்கள் கிடைக்கும். ஆனால் அப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருப்பவர்களை இந்த பரிகாரத்தை செய்ய சொல்லுங்கள். அதுவும் முடியாது என்றால் காலை 6 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த சக்தி வாய்ந்த வழிபாட்டை ஒரே ஒரு வெள்ளிக்கிழமை செய்து விட்டு லட்ச லட்சமாக கோடி கோடியாக பணம் கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது 48 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன்கள் தீர்ந்து போகும் வருமானம் பெருகும். இதோடு சேர்த்து செவ்வாய்க்கிழமை அன்று 5 பேருக்கு உங்கள் கைகளால் நீர் மோர் தானம் செய்யலாம். இது மிகவும் நல்லது நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன வழிபாட்டு முறைகளை பின்பற்றி அதற்கான பலன்களை முற்றிலுமாக பெற்றுக் கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!

Recipes AMP · Quick view
View full