வேண்டுதல் நிறைவேற வராகி அம்மன் வழிபாடு!
இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும் அந்த வகையில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவர் தான் வராகி அம்மன். வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் கஷ்டங்கள் என எதுவுமே இருக
இந்த உலகத்தில் பல தெய்வங்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு இஷ்ட தெய்வம் இருக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும் அந்த வகையில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவர் தான் வராகி அம்மன். வராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகள் கஷ்டங்கள் என எதுவுமே இருக்காது. அப்படிப்பட்ட வராகி அவனிடம் நாம் வேண்டுதல் வைக்கும் போது முழுமையாக அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு ஒரு எளிமையான ஆன்மீக பரிகாரம் உள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வேண்டுதல்கள்
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேண்டுதலை தெய்வத்திடம் முன்வைத்து வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து கொண்டிருப்போம். அப்போது நாம் வழிபாட்டை செய்தது நமக்கு கைக்கோடி வரவில்லை என்றால் இந்த சூட்சமமான பரிகாரங்களை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வராகி அம்மன் இடம் வேண்டுதல் வைக்கும் போது எந்த பொருளை கையில் வைத்துக்கொண்டு வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
வராகி அம்மன் வேண்டுதல்
மார்கழி மாதம் 26 ஆம் தேதி ஏகாதசி வருகிறது அன்றைய தினத்தில் சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. பெருமாளின் அம்சத்தை கொண்டவராக திகழக் கூடியவர் தான் வராகி அம்மன். எனவே அந்த நாள் அன்று வராஹி அம்மனை வழிபாடு செய்யும் போது நாம் வைக்கக்கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.
சூட்சம வழிபாடு
காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாளுக்கு உரிய துளசி இலைகளை கையில் வைத்துக்கொண்டு வடக்கு நோக்கி அமர்ந்து “ஓம் நமோ வராகி தேவியே நமோ நமக” என்ற மந்திரத்தை 111 முறை கூற வேண்டும். பிறகு வராகிய மண்ணின் படத்திற்கு முன்பாக இரண்டு நெய் தீபம் ஏற்றி வைத்து படங்கள் கண்டேனே வீதியமாக வைத்து கையில் வைத்துள்ள துளசி இலைகளை நன்றாக பிடித்துக் கொண்டு வராகி அம்மன் இடம் வேண்டுதல் வைக்க வேண்டும். அன்றைய தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் நல்லது. வீட்டில் உள்ள வராகி அம்மன் படத்திற்கு துளசி மாலையை சாற்றி வழிபாடு செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீண் செலவாகமல் இருக்க! இந்த ஒரு விளக்கு மட்டும் ஏற்றுங்கள் போதும்!