தீராத கடன் பிரச்சனைகள் தீர கால பைரவர் வழிபாடு!!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங

By ·

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் பணத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அருள் செய்யும் படி இறைவனை வேண்டுகிறோம். பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை. பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும். ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். கடன் பிரச்சனை என்பது நமது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு இல்லாமல் செய்து விடுகிறது. கடன் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு. இதனால் கடன் பிரச்சினையைத் தீர்க்கும் பைரவர் வழிபாடு எப்படி செய்வது என்று இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.

கால பைரவர் யார்? 

கால பைரவர் என்பவர் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாகும், இவர் அடியார்களைப் பாதுகாத்து, தீய சக்திகளை அழித்து, வாழ்க்கையில் உள்ள பயங்களை நீக்குபவர். இந்த வடிவமானது அந்தகாசுரனை வதம் செய்ய சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியது. கால பைரவர் பன்னிரண்டு கைகளுடன், நாகத்தைப் பூணூலாகவும், சந்திரனைத் தலையிலும் கொண்டு, சூலம், பாசக்கயிறு, அங்குசம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி, நிர்வாண ரூபத்தில் காட்சி தருகிறார். சிவனின் மகனாக கருதப்படும் பைரவர் 8 வடிவங்களில் அருள் செய்கிறார். காசி நகரத்தை எட்டு திசைகளிலும் இருந்து காவல் காப்பவர் இவர் தான். பைரவர் என்ற சொல்லுக்கு பயத்தை போக்குபவர் என்று பொருள். மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு உடனடியாக அருளை தரக் கூடியவர்.

கடன் தீர பைரவர் வழிபாடு 

கடன் பிரச்சனையால் சிக்கி தவிப்பவர்கள் அதிகம் உண்டு. சராசரி வாழ்க்கை வாழ்பவர் முதல் சன்னியாசி வாழ்க்கை வாழ்பவர்களும் கடனை அடைக்க முடியாத படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கடன் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள் ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோடு அவல்பூந்துறையில் மேற்கு பார்த்து அமைந்துள்ள பைரவரை வழிபட வேண்டும். இக்கோவிலில் கால பைரவர் 39 அடியில் நான்கு கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தி காட்சியளிக்கிறார்.

வழிபாட்டு முறை 

கடனை எப்படி அடைப்பது என்ற கேள்வி பொதுவாக அனைவருக்கும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் வறுமை நீங்கி வளம் பெற ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள கால பைரவருக்கு அஷ்டமி நாளில் விரதம் இருந்து 11 தீபங்கள் ஏற்றி, வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சித்திரை, ஐப்பசி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். இந்த நாட்கள் மற்றும் அஷ்டமி நாட்களில் அதிகாலையில் எழுந்ததும் குளித்து விட்டு விரதம் இருந்து கால பைரவருக்கு வீட்டில் பூஜை செய்ய வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை கோவிலுக்குச் சென்று பைரவருக்கு வடை மாலை சாற்றி, பஞ்ச தீப விளக்கு ஏற்றி உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் பைரவரிடம் கூறி வழிபட வேண்டும். பின் மறுநாள் காலை கோவிலுக்குச் சென்று ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி குறைந்தது 21 அஷ்டமி நாட்களில் நாம் வழிபட்டு வந்தால் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

இதனையும் படியுங்கள் : கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கக்கூடிய காலபைரவர் வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full