கேட்டதை கொடுக்கும் முருகர் வழிபாடு!!
தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்றும் பல நாட்கள் உள்ளது. அதில் செவ்வாய்க்கிழமை கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்கள் எல்லாம் விசேஷ நாட்கள். இந்த நாட்களில் நாம் முருக பெருமானை மனதார வழிபாடு செய்தால் நாம் கேட்ட வரம் கிடைக்கும் அந்த வகையில் முருகப்பெருமானு
தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்றும் பல நாட்கள் உள்ளது. அதில் செவ்வாய்க்கிழமை கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்கள் எல்லாம் விசேஷ நாட்கள். இந்த நாட்களில் நாம் முருக பெருமானை மனதார வழிபாடு செய்தால் நாம் கேட்ட வரம் கிடைக்கும் அந்த வகையில் முருகப்பெருமானுடைய அருளை முழுவதுமாக பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
முருகப்பெருமான் வழிபாடு
முருகப்பெருமானை வழிபடும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேண்டுதல்களை முன் வைப்பார்கள். அது நிறைவேறி விட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் ஆனால் ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் காரணமாக அந்த வேண்டுதல் நிறைவேறாமல் இருக்கும். நாம் என்ன வேண்டுதலை முன்வைக்கிறோம் அந்த வேண்டுதலுக்குரிய கிரகம் என்பதை அறிந்து அதற்கு உரிய நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் நிச்சயமாக அதற்கான பலன்கள் கிடைக்கும். ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய கிரகமாக குரு பகவான் இருப்பார்.
குரு பகவான் வழிபாடு
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். குரு பகவானின் அருள் ஒருவருக்கு இருந்தால் நிரந்தரமான வேலை வருமானம் அனைத்தும் கிடைக்கும். தடைகள் நீங்குவது குழந்தை பாக்கியம் கிடைப்பது திருமண யோகம் கிடைப்பது என அனைத்துமே கிடைக்கும். அப்படிப்பட்ட குரு பகவானுக்கு உரிய கிழமையாக திகழ்வது வியாழக்கிழமை. மேற்குறிப்பிட்ட இந்த காரியங்களில் ஏதேனும் தடைகள் இருந்தால் செவ்வாய்க்கிழமை என்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதை விட வியாழக்கிழமை என்று வழிபாடு செய்யலாம். குரு பகவானின் அருளை பெறுவதற்கு குரு பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்குவதற்கு வியாழக்கிழமை என்று திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வியாழக்கிழமை என்று குரு ஹோரையில் முருகனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
வழிபாட்டை செய்ய வேண்டிய முறை
இந்த வழிபாட்டை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து செய்ய வேண்டும். காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை நேரத்தில் செய்வதும் சிறப்பான ஒன்று தான் எந்த நேரத்தில் உங்களுக்கு செய்ய முடியுமோ அந்த நேரத்தில் செய்யலாம். முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தன குங்கும பொட்டு வைத்து மஞ்சள் நிற பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு அகல் விளக்கு வைத்து அதில் நெய் ஊற்றி மஞ்சள் நிறத்தில் போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய வேண்டுதலை கூற வேண்டும்.
முருகப்பெருமானின் பாடல்கள்
பிறகு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி போன்ற முருகப்பெருமானின் பாடல்களை முழு மனதோடு பாடி முருகப்பெருமானிடம் உங்களுடைய வேண்டுதல்களை வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஆறு வியாழக்கிழமை வழிபாடு செய்தால் குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான நன்மைகளும் தங்கு தடையின்றி கிடைக்கும். தந்தைக்கு குருவாக இருந்து பாடம் கற்பித்த சுப்பிரமணியனை வாரம் தோறும் வியாழக்கிழமை வழிபாடு செய்தால் முருகப்பெருமானுடைய அருளும் குரு பகவானுடைய அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : பணக்கஷ்டம் தீர முருகனுக்கு ஒரு ரூபாய் பரிகாரம்!!