வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாக பிறந்த நட்சத்திர நாளில் வழிபாடு!!
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கு பலவிதமான முறைகளில் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்போம். எவ்வளவு தாரும் முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சிகளில் வெற்றி என்பதை சிலருக்கு கிடைக்காமல் இருக்கும். பலவிதமான தடைகளையும் அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டே
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவதற்கு பலவிதமான முறைகளில் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்போம். எவ்வளவு தாரும் முயற்சி எடுத்தாலும் அந்த முயற்சிகளில் வெற்றி என்பதை சிலருக்கு கிடைக்காமல் இருக்கும். பலவிதமான தடைகளையும் அவமானங்களையும் அசிங்கங்களையும் சந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சினைகள் மட்டுமே இருக்கிறது என்றால் பிறந்த நட்சத்திர நாளன்று இந்த எளிமையான தீப வழிபாட்டை செய்து பாருங்கள்.
27 நட்சத்திரங்கள்
மொத்தமாக இருக்கக்கூடிய 27 நட்சத்திரங்களிலா ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு நாளில் வரும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும் அந்த நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களும் இருக்கும் அதற்கு ஏற்றார் போல் நாம் வழிபட்டு வர நிச்சயமாக நம் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். என்னதான் வழிபாடு செய்தாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று புலம்புபவர்கள் செய்ய வேண்டிய தீப வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
தீப வழிபாடு
தீப வழிபாட்டை நாம் செய்ய ஆரம்பிக்கக் கூடிய நாள் நம்முடைய பிறந்த நட்சத்திர நாளாக தான் இருக்க வேண்டும். வீட்டிலும் இந்த தீப வழிபாட்டை செய்யலாம் அல்லது கோவிலிலும் செய்யலாம். வீட்டில் செய்பவர்களாக இருந்தால் வீட்டு பூஜை அறையில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபட வேண்டும். நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் எது வேண்டுமானாலும் ஏற்றலாம். கோவிலுக்கு செல்லும் பட்சத்தில் உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய தெய்வம் எது என்பதை தெரிந்து கொண்டு பிறகு அந்த கோவிலுக்கு சென்று இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். பிறகு தங்களுடைய பெயரில் அர்ச்சனையும் செய்து மனதார பிரார்த்தனை செய்து கொண்டு வரலாம்.
27 தீப வழிபாடு
பிறந்த நட்சத்திர நாள் அன்று 27 தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவதை விட கோவிலுக்கு சென்று 27 தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். 27 நட்சத்திரங்களும் வரக்கூடிய 27 நாட்களும் தீபம் ஏற்றி அதற்கு உகந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்யும். முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் நம்மை விட்டு விலகிச் செல்லும். எளிமையான வழிபாடாக இருந்தாலும் முழு மனதோடு இந்த வழிபாட்டை செய்து பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பண வரவு அதிகரிக்க மகாலட்சுமி தேவியார் பரிகாரம்!