தீபாவளிக்கு பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு!!

தீபாவளி என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் குஷியாக இருப்பார்கள். அன்றைய தினத்தில் பெண்கள் வீட்டில் தெய்வங்களுக்கு படைப்பதற்காக பலகாரங்களை செய்து புத்தாடைகளையும் சேர்த்து வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதோடு சேர்த்து பெண்கள் செய்ய வ

By ·

தீபாவளி என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிகவும் குஷியாக இருப்பார்கள். அன்றைய தினத்தில் பெண்கள் வீட்டில் தெய்வங்களுக்கு படைப்பதற்காக பலகாரங்களை செய்து புத்தாடைகளையும் சேர்த்து வைத்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அதோடு சேர்த்து பெண்கள் செய்ய வேண்டிய ஒரு சிறிய வழிபாட்டை பற்றியும் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம். இந்த வழிபாடு வீட்டிற்கு செல்வத்தை அதிகரித்துக் கொடுக்கும்.

தீபாவளி பண்டிகை

சிறப்பு மிகுந்த பண்டிகைகளின் ஒன்றாக தீபாவளி பண்டிகையை நாம் வருடம் தோறும் கொண்டாடி வருகிறோம். தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம் பலருக்கும் தெரியும். நரகாசுரனை வதம் செய்த நாளாகவும், ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாகவும் தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் தீபங்களை ஏற்றி வைத்து வெடிகள் வெடித்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட நாளில் பெண்கள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான மகாலட்சுமி வழிபாட்டை பற்றி பார்க்கலாம்.

பெண்களின் பங்கு

வீட்டில் வரக்கூடிய ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பெண்கள் தான் அந்த வீட்டின் கண்களாக இருந்து அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வார்கள். முக்கியமாக தெய்வங்களை வழிபடக்கூடிய விஷயத்தில் மிகவும் கவனத்தோடு செய்வார்கள். குடும்பத்தை சரியாக நிர்வகிக்கக்கூடிய பெண்கள் தான் தெய்வ வழிபாட்டையும் சிறப்பாக செய்வார்கள். தீபாவளி என்று பெண்கள் வீட்டு பூஜை அறையில் பூஜை செய்யும் போது இந்த ஒரு வழிபாட்டையும் சேர்த்து செய்தால் மிகவும் நல்லது.

மகாலட்சுமி வழிபாடு

தீபாவளியன்று பூஜை அறையில் பூஜை செய்யும் போது ஒரு சிறிய தட்டி எடுத்து அதில் பச்சரிசியை பரப்பி மோதிர விரலை பயன்படுத்தி “ஸ்ரீம்” என்ற மகாலட்சுமியின் பீஜ மந்திரத்தை எழுத வேண்டும். இந்த மந்திரத்திற்கு அதிக அளவு சக்தி உள்ளது. இந்த மந்திரம் எழுதிய பச்சரிசியை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து, தாமரை பூவையும் அதன் மேல் வைத்து விட வேண்டும். ஐந்து புது அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி திரி போட்டு ஒவ்வொரு விளக்கிலும் கற்கண்டு போற்று தீபம் ஏற்றி அந்த மந்திரத்தை 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நிச்சயமாக மகாலட்சுமி தாயார் வீட்டில் தங்குவாள் மேலும் செல்வ செழிப்பையும் வாரி வழங்குவாள். இந்த எளிமையான மகாலட்சுமி வழிபாட்டை முழு மனதோடு தீபாவளி என்று பெண்கள் செய்து வீட்டில் செல்வத்தை அதிகரிக்கச் செய்யலாம்.

இதனையும் படியுங்கள் : கஷ்டங்களை நீக்கக்கூடிய பஞ்ச தீப வழிபாடு!!

Recipes AMP · Quick view
View full