வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்தியை விரட்ட வழிபாடு!!
நம்முடைய முன்னேற்றத்தில் சிறிதும் விருப்பமில்லாத ஒரு சிலர் நமக்கு பல வகையான கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தான் நமக்கு கஷ்டங்களை தருகிறார்கள் என்பது கூட தெரியாமல் நாம் அவர்களோடு சகஜமாக பேசி பழகுவோம். ஒரு சிலர் தீய சக்திகளால் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு கூ
நம்முடைய முன்னேற்றத்தில் சிறிதும் விருப்பமில்லாத ஒரு சிலர் நமக்கு பல வகையான கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தான் நமக்கு கஷ்டங்களை தருகிறார்கள் என்பது கூட தெரியாமல் நாம் அவர்களோடு சகஜமாக பேசி பழகுவோம். ஒரு சிலர் தீய சக்திகளால் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு கூட சில பிரச்சனைகளை நமக்கு தருவார்கள். அப்படிப்பட்ட தீய சக்திகளால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கவும் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை விரட்டி அடிக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீய சக்திகள்
எப்பேர்ப்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் ஏவல், பில்லி, சூனியம் கண் திருஷ்டி போன்ற எதுவாக இருந்தாலும் அதனால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்தால் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக மூன்று முறை செய்தால் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் விலகிவிடும் நிம்மதியான வாழ்க்கையும் நமக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட பரிகாரத்தை நாம் முழு மனதோடு நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் முறை
இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு வெள்ளை நிற துணியை மஞ்சளில் நினைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களால் முடிந்த காணிக்கையை வைத்து முடிந்து குலதெய்வத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். அவ்வாறு வைக்கும் பொழுது தீய சக்திகள் வீட்டிலிருந்து விலகியதும் அந்த காணிக்கையை குலதெய்வ கோவில் உண்டியலில் சேர்த்து விடுகிறேன் என்று வேண்டிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருந்தால் இந்த பரிகாரம் நமக்கு வெற்றிகரமாக இருக்கும். இந்த பரிகாரம் செய்வதற்கு 27 எலுமிச்சம் பழங்களை வாங்கி வந்து இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து அதனுடன் தண்ணீர் கலந்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். வீட்டிற்கு வெளியில் வீட்டை சுற்றி தெளிக்க வேண்டும். எலுமிச்சம் பழத் தோலை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை பழ தோல் பரிகாரம்
அமாவாசை அன்று எலுமிச்சம் பழத் தோலோடு 27 அரசு குச்சிகளை வைத்து பச்சைக் கற்பூரத்தை போட்டு நன்றாக எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும். இந்த சாம்பலை தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் வீட்டிற்கு வெளியேயும் தெளிக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக மூன்றாம் அமாவாசைகள் செய்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் நிச்சயமாக வெளியேறிவிடும். தீய சக்தியால் ஏற்பட்ட தோஷங்களும் வெளியேறிவிடும். குலதெய்வத்தை முழு மனதோடு நினைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக நல்லதே நடக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கக்கூடிய எலுமிச்சம் பழ பரிகாரம்!!