பொருளாதார தேவைகள் பூர்த்தியடைய வழிபாடு!!
உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை. பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் தீர்வதற்காக தினமும் நாம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். உழைத்த சம்பாதித்துக் கொண்டே தான் இருக்கிறோம் ஆனாலும் கூட பொருளாதார சிக்கல்களில் இ
உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சனை பொருளாதார பிரச்சனை. பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் தீர்வதற்காக தினமும் நாம் ஓடிக்கொண்டே தான் இருக்கிறோம். உழைத்த சம்பாதித்துக் கொண்டே தான் இருக்கிறோம் ஆனாலும் கூட பொருளாதார சிக்கல்களில் இருந்து வெளியில் வர முடியாத சூழ்நிலை இருக்கிறது. அந்த சூழ்நிலையை நீக்குவதற்கு பொருளாதார தேவைகள் பூர்த்தி அடைவதற்கு மகாலட்சுமி தாயாருக்கு வைக்க வேண்டிய நெய்வேத்தியத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாலட்சுமி தாயார்
மகாலட்சுமி தாயார் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியவர். மகாலட்சுமி தாயாரின் அருள் இருந்தால் கண்டிப்பாக நமக்கு பொருளாதார ரீதியாக இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீரும். மகாலட்சுமியின் அருளால் பணம் நமக்கு கையில் தங்கும் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் உண்டாகும். மகாலட்சுமி தாயாரை பலவிதமான முறைகளில் வழிபட்டிருப்போம் ஆனால் இந்த ஒரு வழிமுறையை பின்பற்றி பாருங்கள்.
மகாலட்சுமி தாயார் வெள்ளிக்கிழமை வழிபாடு
மகாலட்சுமி தாயாரை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்றால் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து வந்தோம் என்றால் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகி வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறை தெரியும் தங்களுக்கு தெரிந்த வழிபாட்டு முறையை முழு மனதோடு செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயார் உடைய அருள் முழுவதுமாக கிடைக்கும். அப்படி மகாலட்சுமி தாயாருக்கு வைக்க வேண்டிய ஒரு நெய்வேத்தியத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மகாலட்சுமி தேவியாருக்கு நெய்வேதியம்
பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு மகாலட்சுமி தேவியாருக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் வழிபாடு செய்துவிட்டு பால், தேன், முந்திரி பருப்பு போன்றவற்றை ஒன்றாக கலந்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனை நெய்வேதியம் ஆக வைத்து வழிபாடு செய்துவர நிச்சயமாக நம்முடைய பொருளாதார தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
இதனையும் படியுங்கள் : செல்வம் சேர மகாலட்சுமி அஷ்டக வழிபாடு