பணம் தொடர்பான பிரச்சினைகள் தீர எமகண்ட நேரத்தில் இந்த வழிபாட்டை மட்டும் செய்யுங்கள்!!
பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடன், இஎம்ஐ, வீண் செலவு, குறைந்த வருமானம், பண வரவு இல்லை, வந்த பணமும் கையில் தங்குவது கிடையாது, கொடுத்த பணம் வரவில்லை என பணம் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். பணம் இருப்பவர்களுக்க
பணம் தான் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. கடன், இஎம்ஐ, வீண் செலவு, குறைந்த வருமானம், பண வரவு இல்லை, வந்த பணமும் கையில் தங்குவது கிடையாது, கொடுத்த பணம் வரவில்லை என பணம் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் தான் அதிகம். பணம் இருப்பவர்களுக்கும் அதன் தேவை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது தான். பணம் இல்லாதவர்கள் அதை பெருக்குவதற்கான வாய்ப்புகளை தினம் தினம் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். பணம் அத்தகைய பெரிய சக்தி வாய்ந்த ஒரு விஷயமாக மாறி விட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வறுமையில் இருந்து விடுபட்டு பணம் சேர நாம் என்ன செய்ய வேண்டும், எந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
பணப் பிரச்சனைகள் தீர எமகண்ட நேர வழிபாடு
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை தான் பணம். பலவிதமான முயற்சிகள், வழிபாடுகள், பரிகாரங்கள் செய்தும் கடன் பிரச்சினை குறையாமல் இருக்கிறது என எண்ணுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் எமகண்ட நேரத்தில் சில காரியங்களை செய்தால் வாழ்க்கையில் கூடுதல் நன்மைகளை பெற முடியும். பொதுவாக எமகண்ட நேரத்தில் எந்த நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது என பெரும்பாலும் ஒதுங்கிக் கொள்கிறோம். ஆனால் இந்த நேரத்தில் சில காரியங்கள் நாம் செய்யும் போது நல்ல பலன்கள் கிடைக்கின்றன. வறுமையிலிருந்து நம்மை காப்பாற்றக்கூடிய நேரம், இந்த எமகண்ட நேரம். அப்படி எமகண்ட நேரத்தில் வறுமையில் இருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வழிபாட்டு முறை
பெருமாள் வழிபாடு எப்பொழுதும் மிக சிறந்த பலனை கொடுக்கும். ஒருவர் அவர் செய்த பாவம் விலக கட்டாயம் அவர்கள் சரண் அடைய வேண்டியது பெருமாளை தான். சிலருக்கு திடீர் பண கஷ்டங்கள் உருவாகி இருக்கும். அவர்கள் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், எமகண்ட நேரத்தில் பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக எமகண்டம் ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் வருகிறது. இது எமனுக்கு ஏற்ற நேரம் என்ற தவறான புரிதலில் எமகண்ட நேரம் கெட்ட நேரமாகவே கருதப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு எமகண்டகன் நல்லதையே செய்வான் என்பது தெரியாது. அதனால் எமகண்ட நேரத்தில் பெருமாளையும் பத்மாவதி தாயாரையும் நீங்கள் வழிபாடு செய்தால், உங்களுக்கு கோடான கோடி பணம் மழையாக கொட்டும்.
பெருமாள் மந்திரம்
ஸ்ரீனிவாச கோவிந்தா வெங்கடேசா கோவிந்தா
பத்மாவதி தாயார் மந்திரம்
ஓம் ஹ்ரீம் பத்மாவதியே வஷட்!
இந்த மந்திரத்தை தினமும் வரும் எமகண்ட நேரத்தில் 10 நிமிடங்கள் ஒதுக்கி பெருமாளை நினைத்து 108 முறை சொல்ல வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் போது நீங்கள் வெளியே இருந்ததாலும் பரவாயில்லை அங்கேயே ஒரு நிமிடம் மனதிற்குள் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். 108 முறை சொல்ல நேரம் இல்லை என்பவர்கள் 27 முறை மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதுமானது. இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து பாருங்கள் உங்களுடைய பண கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் இதுவரை செய்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டிருந்தால் அனைத்தும் விலகி வெற்றி பெறுவீர்கள் அதனால் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கடனை அடைக்க கூடிய பெருமாள் மந்திரம்