சனிப்பெயர்ச்சியில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய சில ராசிகள்!!
சனி பகவானின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அசுப தாக்கங்கள் இருக்கும். அதில் சிம்ம ராசிக்காரர்களும் தனுசு ராசிக்காரர்களும் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். மேஷம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் ஏழரை சனியால் தாக்கத்தை பெறுவார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்க
சனி பகவானின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அசுப தாக்கங்கள் இருக்கும். அதில் சிம்ம ராசிக்காரர்களும் தனுசு ராசிக்காரர்களும் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். மேஷம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் ஏழரை சனியால் தாக்கத்தை பெறுவார்கள். எனவே இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதிலிருந்து விடுபடுவதற்கு என்னென்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படலாம். பொருளாதார ரீதியாக நிறைய சிக்கல்கள் அதிகரிக்கும். சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்படும். உடல் நலக்குறைவு ஏற்படலாம். எனவே உணவு முறையில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி திசை தொடங்கி விட்டதால் உடல்நலத்தில் கவனம் அதிகமாக தேவை. வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பண இழப்பு மரியாதை இழப்பு ஏற்படக்கூடும் எனவே அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். வருமானம் குறையும் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். பொருளாதார ரீதியாக நிதிநிலைமை மோசம் அடையும். மனதை அமைதியாகவும் நிதானமாகவும் வைத்திருக்க வேண்டும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். வணிக ரீதியான முடிவுகளை எடுக்கும் போது முன் ஜாக்கிரதை நடவடிக்கை தேவை. உடல்நலத்தில் சற்று கவனம் அதிகமாக தேவை. மரியாதை குறைய வாய்ப்புள்ளது.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் தொடங்கி விட்டதால் வேதனைகள் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படும். படிப்பில் கவனக்குறைவு ஏற்படலாம். நிதி நிலைமை பலவீனமடையும்.
மீன ராசிக்காரர்களுக்கு இந்த தாக்கங்கள் குறைவதற்கு கடுகு எண்ணெயை எடுத்து முகத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணையை கோவிலுக்கு தானம் செய்ய வேண்டும்.
இதனையும் படியுங்கள் : ஏழரை சனியின் பாதிப்பு விலக வழிபாடு