குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இவர்களுக்கு குரு பகவானின் ஆசி எப்போதும் இருக்கும்!!
ஜோதிடத்தில், குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான்.அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலைய
ஜோதிடத்தில், குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான்.அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கையில் அமோகமாக வந்து விடுவார்கள். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுப கிரகமான குரு பகவான் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் சமமாக அன்பை பொழிகிறார். மேலும் குரு பகவானுக்கு மிகவும் பிடித்த சில ராசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் குருவின் பார்வை இருக்கும். யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம்.
கடகம்
கடகம் சந்திரனால் ஆளப்படுகிறது. ஜோதிடத்தின் படி, இந்த ராசியில் குரு மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் சிரமம் வரும்போதெல்லாம், குரு ஒவ்வொரு முறையும் அருள் புரிந்து இவர்களை காக்கிறார். இவர்களுக்கு வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடிவடையும். வெளியூர் பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இவர்கள் கல்வி, கேள்விகளில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். குருவின் அருள் இவர்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி சூரியனால் ஆளப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு அதிக தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கும். சூரியனின் செல்வாக்கின் கீழ் தலைமைத்துவ குணங்களும் அவர்களுக்கு இயல்பாகவே வருகின்றன. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். குருவின் அருளால் கல்வி மற்றும் தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குருவால் ஆளப்படுகிறார்கள். இதன் காரணமாக, அவர்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு எப்போதும் குருவின் ஆசி கிடைக்கிறது. குருவின் அருளால், இவர்களுக்கு பண பற்றாக்குறையே இருக்காது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். இந்த ராசிக்காரர்களுடன் வியாபாரம் செய்வது பெரும்பாலான சூழ்நிலைகளில் நன்மை பயக்கும். தோல்வியடைந்த முயற்சிகளும் வெற்றியில் முடிவடையும். எந்தவொரு கடின சூழ்நிலையிலும், குருவின் அருள் இவர்களை பாதுகாக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கும் குரு அதிபதியாக இருக்கிறார். இதன் காரணமாக, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். மேலும், குருவின் செல்வாக்கால், அவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். புதிய முதலீடுகளால் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்க கூடும். நல்ல பொருள் மற்றும் இன்பத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் குருபகவான் உடைய அருளால் முன்னோக்கிய பயணத்தை மேற்கொள்வார்கள்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசி