டிசம்பர் மாதம் உருவாகும் மகாபாக்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. யோகம் என்றால் அது ஒரு அமைப்பு தான். அதில் சில ய

By ·

ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் ஒவ்வொரு நேரத்திற்கும் பெயர்ச்சி அடையும், அதன் நிலையும் மாறிக்கொண்டே இருக்கும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களில் பெயர்ச்சி என்பது சில சுபமான யோகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. யோகம் என்றால் அது ஒரு அமைப்பு தான். அதில் சில யோகங்கள் நன்மையும், சில கெடுதலும் செய்வது உண்டு. மிக சிறப்பான யோகங்களின் இந்த மகாபாக்ய ராஜ யோகமும் ஒன்று. வேத சாஸ்திரத்தின் படி, இன்று (டிசம்பர் 17) மாலை 6.47 மணிக்கு சந்திரன் கடக ராசிக்குள் நுழைந்து வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை அங்கேயே இருக்கும். ஏற்கனவே செவ்வாய் கிரகமானது கடக ராசியில் பிற்போக்கு நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில், இந்த செவ்வாய்-சந்திர சேர்க்கை சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். மகாபாக்ய யோகத்தினால் பலன் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.

சிம்மம்

செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் நடக்கும். இந்த நேரத்தில் பல புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற முடியும். செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும். வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்தது. நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.

கன்னி

செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை பதினொன்றாம் வீட்டில் நடைபெறும். இத்தகைய சூழலில் இந்த ராசிக்காரர்களுக்கு மகாபாக்ய யோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : புத்தாண்டு ராசிபலன்கள் 2025!!

Recipes AMP · Quick view
View full